For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹல்லா போல்…!! இந்தா பிடிங்க உங்களுக்கு தலைப்பாகை.. வார்னருக்கு சால்வை

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள ராஜஸ்தான் வந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ராஜ மரியாதை உடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

2018-ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது தொலைக் காட்சியில் தெளிவாக தெரிந்தது.

அதில், தொடர்புடைய அப்போதைய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. மற்றொரு வீரர் பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்களும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

தடைக்காலம் முடிகிறது

தடைக்காலம் முடிகிறது

பான்கிராப்ட்க்கு தடைக் காலம் முடிந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோரின் தடைகாலம் வரும் 29ம் தேதியோடு முடிவடைகிறது.

பல முயற்சிகள்

பல முயற்சிகள்

இதனையடுத்து இருவரையும் உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு முன்பாக அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளனர்.

விளையாட தடை

விளையாட தடை

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஸ்மித் கடந்தாண்டு விளையாட வில்லை. அவருக்கு பதிலாக ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கேப்டன் ரகானே

கேப்டன் ரகானே

அவர் தலைமையிலான ராஜஸ்தான் அணி ப்ளே ஆப் சுற்று வரை சென்றது. அதேபோல், நடப்பு சீசனிலும் ரகானே கேப்டனாக தொடருவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

இந்நிலையில், ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் அவரவர் அணியில் இணைந்து கொண்டனர். ராஜஸ்தான் அணியில் இணைந்த ஸ்மித்துக்கு அணி நிர்வாகம் உற்சாக வரவேற்பு அளித்தது.

தலைப்பாகை அணிவிப்பு

வார்னருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. அதே நேரத்தில், ஸ்மித்துக்கு தலைப்பாகை அணிவித்தும் ஹல்லா போல் ஸ்டீவ் என்று குரல் எழுப்பியும் வரவேற்றனர்.

Story first published: Sunday, March 17, 2019, 21:18 [IST]
Other articles published on Mar 17, 2019
English summary
A royal welcome for Steve Smith in Rajasthan camp.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+