
3வது இடத்தில் ஆர்சிபி
ஐபிஎல் 2021 தொடரின் ஆர்சிபி அணி வீரர்கள் சிறப்பான போட்டிகளை அளித்து வருகின்றனர். தொடர்ந்து வெற்றி முகம் காட்டிய அந்த அணி கடந்த சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 69 ரன்களில் மோசமான தோல்வியை அடைந்ததையடுத்து புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தல்
இந்நிலையில் அந்த அணியின் மிடில் ஆர்டர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார். ஆர்சிபியின் பேட்டிங் வலிமையாக இருந்தாலும், சிறிது குறைவாகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதை நீட்டிப்பதற்காகவே அவர்கள் 3வது இடத்தில் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைப்பதாகவும் கூறியுள்ளார்.

சிறப்பான வீரர் இல்லை
தேவ்தத், விராட் கோலி, மேக்ஸ்வெல், ஏபி டீ வில்லியர்ஸ் இவர்களுக்கு அடுத்ததாக ஆர்சிபியில் 5வது இடத்தில் விளையாட சிறப்பான வீரர் யாரும் இல்லை என்றும் வாஷிங்டன் அல்லது டான் கிறிஸ்டியனும் அந்த இடத்திற்கு சரிபட்டு வரமாட்டார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

டேனியல் சாம்சை இணைக்கவேண்டும்
டேனியல் கிறிஸ்டியன் சிறப்பான டி20 ஆல்-ரவுண்டராக இருந்தாலும் இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்துள்ளதாகவும் இதுவரை 5 ஒவர்களை போட்டுள்ள அவர் ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ள ஆகாஷ் சோப்ரா, அவருக்கு பதிலாக டேனியல் சாம்ஸ்சை அணிக்குள் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சிறப்பான பேட்டிங் லைன்-அப்
இதேபோல அணியில் ரஜட் பட்டிதாருக்கு ஒரு இடம் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் வாஷிங்டன் 6வது இடத்திலும் ஜாமீசன் 7வது மற்றும் டேனியல் சாம்ஸ் 8வது இடத்திலும் விளையாடலாம். அணியின் லைன்-அப் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அணியிலிருந்து நவ்தீப் சைனியை நீக்கிவிட்டு இந்த பேட்டிஸ்மேன் ஒருவரை சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











