Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீசல் இஞ்சின் மாதிரி மெதுவாக விளையாடாதீங்க.. சிஎஸ்கே வீரரை கிண்டல் செய்த ஆகாஷ் சோப்ரா

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை வரும் 31ஆம் தேதி அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.

கடந்த முறை சிஎஸ்கே அணி ஒன்பதாவது இடத்தை பிடித்ததால் இம்முறை சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் போன்ற அதிரடி ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இதனால் இந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடியதுதான் காரணம் என கருதப்பட்டது.

பென் ஸ்டோக்ஸ் இயல்பு

பென் ஸ்டோக்ஸ் இயல்பு

இதனால் இம்முறை தொடக்க வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதில், நாம் டி20 உலக கோப்பையை பார்த்திருக்கிறோம். அதில் பென் ஸ்டோக்ஸ் சில பந்துகளை முதலில் எதிர்கொண்டு அதன் பிறகு தான் அதிரடியை தொடங்கினார். அவர் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் தான் இறங்கி இருக்கிறார்.

மாற்று வீரர்

மாற்று வீரர்

பென் ஸ்டோக்ஸ் அடித்த சதம் அவர் பேட்டிங் ஆர்டரின் முன் வரிசையில் இறங்கும்போதுதான் நடந்திருக்கிறது. எனினும் இம்முறை சென்னை அணி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் உத்தப்பாவுக்கு மாற்று வீரர்களை தேடி வருகிறார்கள் என கருதுகிறேன். மற்றொரு தொடக்க வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் மெதுவாக இன்னிங்ஸை தொடங்கி அதன் பிறகு தான் வேகத்தை கூட்டுவார்.

அதிரடியாக ஆடுங்கள்

அதிரடியாக ஆடுங்கள்

ஆனால் இம்முறை அப்படி விளையாட கூடாது. அதற்கான சூழலும் இல்லை. டீசல் இன்ஜின் காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்போதெல்லாம் மின்சாரத்தில் தான் அனைத்து வாகனங்களும் ஓடுகிறது. எனவே ருத்துராஜ் வேகத்தை அதிகரிக்கக்கூடிய மின்சார வாகனம் போல் இருக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ருத்ராஜ் கடந்த 2021 ஆம் ஆண்டு சீசன்னில் 635 ரன்கள் அடித்திருந்து அசத்தினார். மேலும் கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ருத்ராஜ் 368 ரன்கள் அடித்தார்.

பவர்பிளே சிக்கல்

பவர்பிளே சிக்கல்

இதில் ஸ்ட்ரைக் ரெட் 126 என்ற அளவில் இருந்தது. தற்போது ருத்ராஜ் மெதுவாக விளையாடும் வீரராக இருந்தால் சிஎஸ்கே அணி பவர் பிளேவை சரியாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் தொடக்க வீரர்கள் ஒருவர் அதிரடியாக ஆடக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பென் ஸ்டோக்ஸ் ஆங்கர் ரோல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போன்று ஸ்டோக்ஸ்க்கு பதில் டேவோன் கான்வே தொடக்க வீரராக களமிறங்கினால் அதுவும் சிக்கல் தான். கான்வேவும் மெதுவாக விளையாடக் கூடிய வீரர். இதனால் அப்போதும் ருத்துராஜ் தான் அதிரடியாக விளையாட வேண்டும்.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

கடந்த முறை தொடக்கத்தில் இரு அணி வீரர்களும் மெதுவாக விளையாடினார்கள். இந்த தவறை தான் சிஎஸ்கே அணி செய்தது. இதனால் சிஎஸ்கே அணி தங்களது யுத்தியை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன் குவித்தால்தான் ,அதன் பிறகு விளையாடக்கூடிய வீரர்கள் நெருக்கடி இன்றி அதிரடியாக ஆடுவார்கள்.

ருத்துராஜ் கெட்ட பழக்கம்

ருத்துராஜ் கெட்ட பழக்கம்

மேலும் ருத்ராஜ்க்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. முதல் மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழப்பதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். தற்போது இந்திய அணியில் ருத்துராஜ் தனது இடத்தை இழந்து விட்டதால் இந்த ஐபிஎல் தொடரில் சாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Story first published: Wednesday, March 29, 2023, 12:59 [IST]
Other articles published on Mar 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+