Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு வாய்ப்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம்.. டி20 உலகக்கோப்பை ரேஸ்..சீனியர் வீரருக்கு சிக்கல்!

டெல்லி: சீனியர் வீரர் ஷிகர் தவானுக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைப்பது மிக கடினம் என முன்னாள் வீரர் கணித்துள்ளார்.

இந்திய அணிக்கு சிறப்பான தொடக்க வீரராக திகழ்ந்து வந்த ஷிகர் தவானுக்கு கடந்த 2 ஆண்டுகளாக டி20 அணியில் சரிவர வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் போட்டியில் மட்டுமே தவானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதில் சரியாக ஆடாததால், அடுத்த போட்டியில் இருந்து வெளியில் உட்கார வைக்கப்பட்டார்.

 உலகக்கோப்பை

உலகக்கோப்பை

ஷிகர் தவானின் டி20 வாழ்கை முடிந்தது என விமர்சிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடர் மூலம் வாய்ப்பிழக்க செய்தார் ஷிகர் தவான். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அவர் 8 போட்டிகளில் 380 ரன்களை விளாசினார். மேலும் இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் அவர் திகழ்கிறார். இதனால் அவருக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 ஷிகர் தவான் நிலைமை

ஷிகர் தவான் நிலைமை

ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியில் தற்போது பார்த்தால், ஓப்பனிங்கிற்கு கோலி, ரோகித், கே.எல்.ராகுல் நல்ல ஃபார்மில் உள்ளனர். பிரித்வி ஷாக்கு கூட வாய்ப்பு கிடைக்கலாம். இதுமட்டுமல்லாமல் டாப் ஆர்டரில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளதால் கடும் போட்டி நிலவுகிறது.

அதிரடி கம்பேக்

அதிரடி கம்பேக்

ஆனால் ஷிகர் தவானின் விவகாரம் சற்று வித்தியாசமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் அவர் ஃபார்ம் அவுட் என நினைக்கும்போது மீண்டும் கம்பேக் கொடுத்து அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த முறையும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார். அதனால் அவர் மறுக்க முடியாத வீரராக தன்னை மாற்றிக்கொள்கிறார்.

அந்த ஒரு வாய்ப்பு

அந்த ஒரு வாய்ப்பு

இலங்கை சுற்றுப்பயணம் ஷிகர் தவான் விஷயத்தில் ஒரு தெளிவை கொடுக்கும். அவர் ஒருவேளை இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெற்றால் கேப்டனாக நியமிக்கப்படுவார். எனவே ஒரு கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என இரண்டிலும் அவர் சாதித்துவிட்டால் நிச்சயம் அவர் டி20 உலகக்கோப்பையில் இருப்பார். பிசிசிஐ-ஆல் அவரை தவிர்க்கவே முடியாது.

Story first published: Thursday, May 13, 2021, 20:51 [IST]
Other articles published on May 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+