Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-காக முன்னாள் வீரர் கொடுத்த அட்வைஸ்.. அதிர்ச்சியில் ஆடிப்போன அணிகள்..இதெல்லாம் நடக்குற விஷயமா?

மும்பை: 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் சேர்க்கப்படுவது குறித்து முன்னாள் வீரர் தெரிவித்துள்ள ஆலோசனை தற்போது இருக்கும் அணிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

இந்தாண்டு இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடர் கொரோனா பாதிப்பு அதிகமானதால் பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை மீண்டும் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ள சூழலில் அடுத்த வருட ஐபிஎல் குறித்த பேச்சுக்கள் அதிகளவில் எழுந்து வருகிறது.

புதிய அணிகள் சேர்ப்பு

புதிய அணிகள் சேர்ப்பு

ஐபிஎல் தொடரில் இதுவரை 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதனை அடுத்த சீசனில் இருந்து 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதற்காக 2022ம் ஆண்டில் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட்டு பிரம்மாண்ட அளவில் வீரர்கள் ஏலம் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

அயல்நாட்டு வீரர்கள்

அயல்நாட்டு வீரர்கள்

அதே போல அணியின் ப்ளேயிங் 11ல் அயல்நாட்டு வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வரை 4 வெளிநாட்டு வீரர்களே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசியிருந்த முன்னாள் வீரர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர், ஐபிஎல்-ல் 10 அணிகள் வந்தால், ஒவ்வொரு அணியின் ப்ளேயிங் 11லும் 5 அயல்நாட்டு வீரர்கள் ஆட அனுமதிக்க வேண்டும் எனத்தெரிவித்து வருகின்றனர்.

நிபந்தனை

நிபந்தனை

இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா புதிய குண்டு ஒன்றை தூக்கி போட்டுள்ளார். கடைசியாக நடத்தப்பட்ட மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளவும், Right to match Card வாய்ப்பை 2 முறை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அடுத்தாண்டு மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் 2 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும், Right to match Card வாய்ப்பும் ஒரே ஒரு முறை மட்டுமே வழங்கவேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா விளக்கம்

ஆகாஷ் சோப்ரா விளக்கம்

இதுகுறித்து பேசிய அவர், தற்போது சிறப்பான வீரர்களை நன்கு செட்டில் ஆகி இருக்கும் அணிகள் நாங்கள் ஏன் முக்கிய வீரர்களை இழக்க வேண்டும் எனக்கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் புதிதாக வரக்கூடிய அணிகளுக்கு நியாயமான முறையில் வீரர்கள் கிடைக்க வேண்டும் என்றால் இதனை செய்தாக வேண்டும் எனக்கூறியுள்ளார்.

பல்டி அடித்த பிசிசிஐ

பல்டி அடித்த பிசிசிஐ

இதனிடையே 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளை சேர்க்கும் முடிவை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரை மீண்டும் எப்படி நடத்துவது, எங்கு நடத்துவது என்ற குழப்பம் பிசிசிஐயில் பெரியளவில் உள்ளதால் அடுத்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் சேர்க்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிகிறது.

Story first published: Wednesday, May 19, 2021, 18:52 [IST]
Other articles published on May 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+