Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை தக்க வைக்கக்கூடாது... விடுவித்து மீண்டும் ஏலத்தில் எடுக்கணும்... ஆகாஷ் சோப்ரா ஆலோசனை

டெல்லி : சிஎஸ்கே அணி தோனியை இந்த ஆண்டு தக்க வைக்காமல், விடுவித்து மீண்டும் ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்.

தோனி அடுத்த ஆண்டு மட்டுமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவருக்காக 15 கோடி ரூபாயை செலவழிக்காமல் புதிய வீரர்களை எடுத்து அணியை பலப்படுத்துவதில் அந்த தொகையை செலவழிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஐபிஎல் 2021 சீசனையொட்டி மெகா ஏலம் நடத்தப்படும் நிலையில், தோனியை அணியிலிருந்து விடுவித்து மீண்டும் ஏலத்தில் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சொதப்பிய தோனி மற்றும் அணி

சொதப்பிய தோனி மற்றும் அணி

பரபரப்பாக நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 சீசனில் சிஎஸ்கே தனது வழக்கமான சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்யவில்லை. மாறாக 14 போட்டிகளில் 6ல் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே-ஆப் சுற்றிற்கும் தகுதி பெறாமல் தொடரிலிருநது வெளியேறியது. கேப்டன் தோனியும் சிறப்பாக விளையாடவில்லை.

தோனி உறுதி

தோனி உறுதி

இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என்று தோனியும் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனும் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

மீண்டும் ஏலத்தில் எடுக்க வேண்டும்

மீண்டும் ஏலத்தில் எடுக்க வேண்டும்

தோனி அடுத்த ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரை அணியில் தக்க வைக்காமல், விடுவித்து, மீண்டும் ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதன்மூலம் 15 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

சிஎஸ்கேவிற்கு அவசியம்

சிஎஸ்கேவிற்கு அவசியம்

மேலும் அவ்வாறு சேமிக்கப்படும் தொகையை கொண்டு, பல சிறப்பான வீரர்களை அணியில் இணைக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அணியின் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் இருப்பும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தற்போதைய சூழலில் சிஎஸ்கே அணிக்கு மெகா ஏலம் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, November 17, 2020, 19:15 [IST]
Other articles published on Nov 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+