Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த தப்பை செய்ய மறுத்தேன்.. டீமை விட்டே தூக்கி விட்டார்கள்.. வெளியான பாக். அணி வண்டவாளம்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணியில் மேட்ச் பிக்ஸிங் புகார் ஒன்றும் புதிதல்ல.

Recommended Video

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வண்டவாளம் வெளியானது

ஆனால், கடந்த சில நாட்களாக முன்னாள் வீரர்கள் பல மேட்ச் பிக்ஸிங் புகார்களை கூறி வருவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

90கள் முதல் இந்த மேட்ச் பிக்ஸிங் புகார்கள் கூறப்படுகிறது. முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஆகிப் ஜாவேத் ஒரு வீரரின் பெயரோடு மேட்ச் பிக்ஸிங் புகார் ஒன்றை முன் வைத்துள்ளார்.

மேட்ச் பிக்ஸிங் பிரச்சனை

மேட்ச் பிக்ஸிங் பிரச்சனை

ஆகிப் ஜாவேத் முன்பே ஒரு முறை பாகிஸ்தான் அணியில் நிலவும் மேட்ச் பிக்ஸிங் பிரச்சனை குறித்து பேசி உள்ளார். ஆனால், அப்போது அவர் யாருடய பெயரையும் குறிப்பிடவில்லை. இந்த நிலையில், தற்போது தன்னை ஒரு வீரர் மேட்ச் பிக்ஸிங் செய்ய அழைத்ததாக கூறி உள்ளார்.

அழைத்தார்கள்

அழைத்தார்கள்

"பணக்கார கார்கள், பல கோடி ரூபாய் ஒரு வீரருக்கு கொடுக்கப்பட்டது. என்னையும் கூட மேட்ச் பிக்ஸிங் செய்ய அழைத்தார்கள். நான் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் என் கேரியர் முடிந்து விடும் என மிரட்டினார்கள்." என அதிர வைக்கும் தகவலைக் கூறினார் ஜாவேத்.

முன்னாள் வீரர்

முன்னாள் வீரர்

மேலும், வீரர்கள் அனைவரும் முன்னாள் வீரர் சலீம் பெர்வேஸ் பெயரை சொல்லி அணுகப்பட்டனர் என கூறி உள்ளார். முதன் முறையாக மேட்ச் பிக்ஸிங் செய்ய அழைத்த வீரர் யார் என்ற உண்மையை உடைத்துள்ளார் ஜாவேத்.

பாதியில் முடிந்த கிரிக்கெட் வாழ்க்கை

பாதியில் முடிந்த கிரிக்கெட் வாழ்க்கை

"எனக்கு மேட்ச் பிக்ஸிங் பற்றி தெரிய வந்த போது, உறுதியாக முடிவு எடுத்து, அதிலேயே விடாப்பிடியாக நின்றேன். அதனால், என் கேரியர் பாதியில் நின்று போனதை பற்றி நான் கவலைப்படவில்லை." என்றார் ஆகிப் ஜாவேத்.

ஒதுக்கி வைத்தார்கள்

ஒதுக்கி வைத்தார்கள்

மேலும், "மேட்ச் பிக்ஸிங் செய்ய மாட்டேன் என்ற என் முடிவால் என்னை சில சுற்றுப் பயணங்களில் ஒதுக்கி வைத்தார்கள். என்னிடம் பேசிய சில வீரர்களையும் கடிந்து கொண்டார்கள்." எனவும் கூறி பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மறுபக்கத்தை வெளிப்படுத்தினார்.

வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாசிம் அக்ரம் உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை வெல்லாமல் பார்த்துக் கொண்டார் என முன்னாள் கேப்டன் ஆமிர் சோஹைல் குற்றம் சுமத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 22, 2020, 10:08 [IST]
Other articles published on Jun 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+