Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை.. முதலிடத்தில் டிவில்லியர்ஸ்

துபை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 164 ரன்களைக் குவித்ததன் மூலமாக தென்னாப்பிரிக்காவின் அம்லாவை 2-வது இடத்துக்கு தள்ளினார். டிவில்லியர்ஸ். அவர் மொத்தம் 909 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இது டிவில்லியர்ஸின் அதிகபட்ச தரவரிசை புள்ளியாகும்.

AB de Villiers regains No.1 Test batting ranking

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து முதல் இடத்தை ஆக்கிரமித்து இருந்த அம்லா, மனைவிக்கு குழந்தை பிறந்ததால் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் விலகினார். இதனால் தான் அவர் முதலிடத்தை பறிகொடுக்க வேண்டியதாகிவிட்டது. இதே டெஸ்டில் இரட்டை சதம் அடித்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் சுமித் 7 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை எட்டியுள்ளார்.

முதல் 10 இடத்துக்குள் அவர் நுழைவது 2012-ம் ஆண்டு ஏப்ரலுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பெற்றுள்ளார்.

இந்திய தரப்பில் முதல் 10 இடங்களில் புஜாரா மட்டுமே 7வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின், பிலாண்டர் முதல் இரு இடங்களில் உள்ளனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 8-வது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Monday, October 28, 2013, 9:45 [IST]
Other articles published on Oct 28, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+