For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட, சே.. அப்பா அவுட் ஆன விரக்தி.. சேரை போட்டு தாக்கிய மகன்.. ஆனால் அடுத்த நொடி செம.. க்யூட் வீடியோ

துபாய்: பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், தனது தந்தை அவுட் ஆன பிறகு விரக்தியில் சேரில் தனது கையை அடித்த கொள்ளும் ஏபி டிவில்லியர்ஸின் மகனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Virat Kohli Consoles Ishan Kishan after MI's loss to RCB | IPL 2021 | OneIndia Tamil

ஐபிஎல் 2021 போட்டிகள் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடைபெற்றது.

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

மும்பை vs ஆர்சிபி

மும்பை vs ஆர்சிபி

அதன் பின்னர் நேற்றிரவு பெங்களூரூ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கத்திலேயே பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல், 2ஆவது ஓவரிலேயே பும்ரா பந்து வீச்சில் டக் அவுட் ஆனார். இருப்பினும், அதன் பின்னர் பாட்னர்ஷிப் அமைத்த விராட் கோலியும் கீப்பர் ஸ்ரீகர் பரத்தும் அற்புதமாக விளையாடினர். சிக்ஸர்களும் பவுண்டரிகளும் வந்து கொண்டே இருந்ததால் ரன்கள் ஜெட் வேகத்தில் எகிறியது. இருவருக்கும் இடையே சூப்பரான பாட்னர்ஷிப் உருவாகி வந்ந போது தான், ஸ்ரீகர் பரத் 32 ரன்களில் ராகுல் சாகர் ஓவரில் வெளியேறினார்.

மெக்ஸ்வெல் அதிரடி

மெக்ஸ்வெல் அதிரடி

அதன் பின்னர் மெக்ஸ்வெல் களமிறங்கினார். கடந்த சில போட்டிகளில் பெரிதாகத் தடுமாறி வந்த மெக்ஸ்வெல், இந்த போட்டியில் முதலில் சில பந்துகள் பொறுமை காத்தார். எனினும் குர்னல் பாண்டியாவின் 12ஆவது ஓவரில் ரிவர்ஸ் சுவிப்பில் அட்டகாசமான ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டு தனது அதிரடி இன்னிங்கஸை தொடங்கினார். மெக்ஸ்வெல் அதிரடியில் பெங்களூரு அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்து வந்தது. அப்போது அரைசதம் அடித்திருந்த கோலி 52 ரன்களில் மில்னே பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் இறங்கினார்.

ஏபி டி அவுட்

ஏபி டி அவுட்

ஒரு புறம் தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த மெக்ஸ்வெலுடன் ஏபி டி வில்லியர்ஸும் இணைந்ததால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர தொடங்கியது. அப்போது பும்ரா வீசிய 18ஆவது ஓவரில் மும்பை அணிக்கு இரட்டை ஷாக் காத்திருந்தது. அந்த ஓவரின் 3ஆவது பந்தில் செட் ஆகி இருந்த பேட்ஸ்மென் மெக்ஸ்வெல் 56 ரன்களில் வெளியேறினார். அதற்கு அடுத்த பந்திலேயே ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்தார். சிக்சர் அடிக்க ஏபி டி முயல, அது டாப் எட்ஜ் ஆகி கீப்பர் கி காக் கையில் தஞ்சம் புகுந்தது. அடுத்து அடுத்து 2 அதிரடி வீரர்கள் வெளியேறியதால் ஆர்சிபி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மகனின் க்யூட் ரியாக்ஷன்

மகனின் க்யூட் ரியாக்ஷன்

ஏபி டி வில்லியர்ஸ் அவுட் ஆனவுடன் கேமரா அவரது குடும்பத்தினர் பக்கம் திரும்ப, அப்போது ஏபி டி வில்லியர்ஸ் மகன் செய்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது தந்தை அவுட் ஆன விரக்தியில் சேரில் ஓங்கி ஒரு அடி விட்டார் அவரது மகன். ஆனால் எதிர்பார்த்ததைவிட அது அதிகமாக வலிக்கவே அடுத்த நொடியே ஏன்தான் இதை செஞ்சோம் என்ற ரேஞ்சுக்கு அவரது முகம் மாறுகிறது. அவரது இந்த ரியாக்ஷனை கண்டு அருகில் இருந்த ஏபி டி வில்லியர்ஸின் மனைவி டேனியல் சற்று பதறிவிட்டார். சில நொடிகளில் பல ரியாக்ஷன்களை வெளிப்படுத்திய ஏபி டி-இன் மகனின் வீடியோ தான் இப்போது ட்விட்டர் டிரெண்டிங்.

வெற்றி

வெற்றி

இப்படி அடுத்தடுத்து விக்கெட் வீழுந்ததால் பெங்களூரு அணியால் எதிர்பார்த்தபடி 180 ரன்களை அடைய முடியவில்லை. பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவுகள் 165 ரன்களை எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணிக்கு அட்டகாசமான தொடக்கம் அமைந்தது. 6 ஒவர்களிகல் 50 ஓட்டங்களைக் கடந்தனர். இருப்பினும், அதன் பின்னர் வரிசையாக விக்கெட் விழத் தொடங்கியது. குறிப்பாக ஹர்ஷல் படேலின் சிறப்பான பந்துவீச்சில் மும்பை வீரர்கள் திணறி போகினர். 18.1 ஓவரில் மும்பை அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு 3ஆவது இடத்திற்குச் சென்றுள்ளது.

Story first published: Monday, September 27, 2021, 16:24 [IST]
Other articles published on Sep 27, 2021
English summary
AB de Villiers son viral video. MI vs RCB match latest.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+