டேவில்லியர்ஸ் பிறந்தநாள்.. அவர் வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல.. உங்களுக்கு தெரியாத 10 விசயம்
கேப்டவுன்: உலகின் பிரபலமான கிரிக்கெட் வீரர் ஏபி டேவில்லியர்ஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஏபி டேவில்லியர்ஸ் 360 டிகிரி என்ற கிரிக்கெட் வீரர் என்று நம் அனைவருக்கும் தெரியும். தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதால் அவர் இடத்தை நிரப்ப ஒரு வீரர் வருவது கடினமே.
இந்த நிலையில், டேவில்லியர்ஸ் வெறும் கிரிக்கெட் வீரர் மட்டும் அல்ல. அவர் நம்ம ஊர் கமல்ஹாசன் போல் பல திறமைகளை உடையவர்.

பாடகர், விஞ்ஞானி
ஏபி டேவில்லியர்ஸ் ஒரு நல்ல பாடகர், பாப் பாடலில் ஆர்வம் உடையவர். அதுவும்ஆங்கிலத்திலும், ஆப்பிரிக்க மொழியிலும் பாடக் கூடியவர். டேவில்லியர்ஸ் ஒரு குட்டி சைன்டிஸ்ட், தன்னுடைய சைன்ஸ் பிராஜக்ட்டுக்காக தேசிய அளவில் விருதுகளை வாங்கியுள்ளார்.டேவில்லியர்ஸ் தென்னாப்பிரிக்க அண்டர் 19 வெலலின் தேசிய பேட்மிண்டன் சாம்பியன் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

கோல்ஃப், டென்னிஸ்
ஏபி டேவில்லியர்ஸ் ஒரு நல்ல கோல்ஃப் வீரர், வெறும் பொழுது போக்குக்காக அல்ல. தொழில்முறை கோல்ப் வீரராக தகுதியையும் டேவில்லியர்ஸ் பெற்றுள்ளார். ஏபி டேவில்லியர்ஸ் ஒரு நல்ல டென்னிஸ் வீரரும் கூட, டேவிஸ் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க ஜூனியர் அணியிலும் டேவில்லியர்ஸ் இடம்பிடித்துள்ளார்.

தடகளம், நீச்சல்
இதே போன்று 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஏ பி டேவில்லியர்ஸ் தென்னாப்பிரிக்க ஜூனியர் அளவிலான தடகள போட்டியில் பங்கேற்றார். இதே போன்று டேவில்லியர்ஸ் ஒரு நல்ல நீச்சல் வீரர். பள்ளிகளுக்கான தேசிய அளவில் ஆறு சாதனைகளை டேவில்லியர்ஸ் தனது மாணவ பருவத்தில் படைத்துள்ளார்.

கால்பந்து, ஹாக்கி, ரக்பி
ஏபி டேவில்லியர்ஸ் ஒரு நல்ல கால்பந்தாட்ட காரரும கூட, தனது இளம் வயதில் டேவில்லியர்ஸ் தென்னாப்பிரிக்க ஜூனியர் கால்பந்து அணியில் இடம்பெற்று இருந்தார். டேவில்லியர்ஸ்க்கு ஹாக்கி என்றால் அவ்வளவு இஷ்டமாம். பள்ளி பருவத்தில் தேசிய ஜூனியர் ஹாக்கி அணியில் இடம்பெற்று இருந்தார். இதே போன்று டேவில்லியர்ஸ் தேசிய ஜூனியர் ரக்பி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். இதில் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருந்ததால், கிரிக்கெட்டையே தனது தொழிலாக எடுத்து கொண்டார்.


Click it and Unblock the Notifications