Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெள்ளி விழா பாத்துருக்காரு ஏபிடீ... 25 விருதுகளை தட்டித் தூக்கியிருக்காரு... மிகச்சிறப்பு!

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி -டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய நிலையில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.

Recommended Video

AB De villiers played stormy innings against Delhi capitals|Oneindia Tamil

இந்த போட்டியில் ஆர்சிபி வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் 42 பந்துகளில் அதிரடியாக விளையாடி 75 ரன்களை குவித்தார்.

இந்த அதிரடி ரன்களால் வெற்றி ஆர்சிபி வசமானது.

23வது போட்டி

23வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 23வது போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 172 ரன்களை டெல்லி அணிக்கு இலக்காக கொடுத்திருந்தது. அடுத்தடுத்து துவக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்த நிலையில் அணியின் டீ வில்லியர்ஸ் அணிக்கு சிறப்பாக கைகொடுத்தார்.

சிறப்பான டீ வில்லியர்ஸ்

சிறப்பான டீ வில்லியர்ஸ்

அணியின் ரஜத் பட்டிதார் மற்றும் மாக்ஸ்வெல் மட்டுமே ஓரளவிற்கு சிற்பபான ரன்களை அடித்திருந்த நிலையில் டீ வில்லியர்ஸ் மட்டுமே 42 பந்துகளில் அதிரடியாக விளையாடி 75 ரன்களை குவித்திருந்தார். இதையடுத்து ஆர்சிபியின் ரன்கள் மளமளவென அதிகரித்தது.

1 ரன் வித்தியாசத்தில் தோல்வி

1 ரன் வித்தியாசத்தில் தோல்வி

தொடர்ந்து விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி, இந்த ஸ்கோரை அடிக்க போராடியது, அணியின் ரிஷப் பந்த், ஷிம்ரன் ஹெட்மயர் உள்ளிட்டோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். ஆயினும் அவர்களால் இலக்கை எட்ட முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்தனர்.

ஆட்டநாயகன் விருது

ஆட்டநாயகன் விருது

இதற்கு முக்கிய காரணம் ஆர்சிபி வீரர் ஏபிடீ மட்டுமே. அவர் அதிரடியாக ஆடிய ஆட்டத்தால் ஆர்சிபியின் ஸ்கோர் சிறப்பாக உயர்ந்தது. இதையடுத்து அவருக்கு நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இதுவரை அவர் 2 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.

சிறப்பான வேகம்

சிறப்பான வேகம்

இது மட்டுமில்லாம இந்த விருது அவர் ஐபிஎல்லில் வாங்கும் 25வது ஆட்ட நாயகன் விருதாகும். அடுத்ததாக 22 ஆட்ட நாயகன் விருதுகளுடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிறிஸ் கெயில். இதனிடையே, ஆர்சிபி அணிக்காக அதிக ஆண்டுகள் விளையாடிவரும் டீ வில்லியர்ஸ் தொடர்ந்து அந்த அணியின் நம்பிக்கைக்குரியவராக உள்ளார். வயதானாலும் அவரது வேகம் மிகச்சிறந்த வியப்பை அளித்து வருகிறது.

Story first published: Wednesday, April 28, 2021, 20:24 [IST]
Other articles published on Apr 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+