Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி கிரிக்கெட்டுக்கு குட்பை..!! டிவில்லியர்ஸ் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

கேப் டவுன்; தென்னாப்பிரிக்க அணி கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் இனி ஐ.பி.எல். உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Recommended Video

AB de Villiers retires from cricket, to miss IPL and RCB | OneIndia Tamil

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து மோதலால் டிவில்லியர்ஸ், 2018ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐ.பி.எல் உள்ளிட்ட எந்தவிதமான போட்டியிலும் பங்கேற்கப் போவதில்லை என டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்

ஓய்வு

ஓய்வு

தனது ஓய்வு முடிவ குறித்து டிவில்லியர்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கிரிக்கெட் விளையாடிய காலங்கள் தம்மால் மறக்க முடியாதவை, என் மூத்த சகோதரர்களுடன் சிறு வயதில் வீட்டின் பின்புறம் விளையாட தொடங்கியதிலிருந்து, இத்தனை காலமும் மகிழ்ச்சியுடன், ஆர்வத்துடனும் விளையாடி வந்தேன்.ஆனால் தற்போது வயது 37 ஆகிவிட்டது. அந்த கிரிக்கெட் ஒளியும், ஆர்வமும் தனக்குள் குறைய தொடங்கி விட்டது. அதனால் நன்று யோசித்து தான் இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஆர்.சி.பி.யுடன் உறவு

ஆர்.சி.பி.யுடன் உறவு

ஆர்.சி.பி. அணி குறித்தும் டிவில்லியர்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆர்.சி.பி. அணி நிர்வாகம் தனக்கு எப்போதும் ஆதரவு அளித்து வந்தது. 11 ஆண்டுகளாக இருந்த அணியை விட்டு தற்போது வெளிவருவது மனவேதனையை தருகிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் ஒரு ஆர்.சி.பி. வீரராக தான் இருப்பேன், என் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளேன். இதனால் தான் இந்த ஓய்வு முடிவு எடுத்துள்ளேன்

360 டிகிரி வீரர்

360 டிகிரி வீரர்

பந்தை எப்படி வீசினாலும், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சூழன்று அடிக்கக் கூடிய சூறாவளி தான் டிவில்லியர்ஸ். ஆர்.சி.பி. அணிக்காக 157 போட்டிகளில் விளையாடி 4522 ரன்களை விளாசியுள்ளார் டிவில்லியர்ஸ். 2021ஆம் ஆண்டில் கூட டிவில்லியர்ஸ் 15 போட்டிகளில் விளையாடி 313 ரன்களை விளாசியுள்ளார். டிவில்லியர்ஸ் இல்லாதது , ஆர்.சி.பி. அணிக்கு ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது

மோதல்

மோதல்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் செயல்கள் மற்றும் விதிகளால் கோபம் கொண்ட டிவில்லியர்ஸ் 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். டிவில்லயர்ஸ் விலகிய பிறகு, தென்னாப்பிரிக்க அணி திணறியது. இதனால் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க டிவில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்தார். ஆனால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் பெரும் ஏமாற்றத்துடன் இருந்த டிவில்லியர்ஸ் தற்போது கிரிக்கெட்டை விட்டே விலகுவதாக அறிவித்துள்ளார். டிவில்லியர்சின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.

Story first published: Friday, November 19, 2021, 18:23 [IST]
Other articles published on Nov 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+