Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய மனசுங்க அவருக்கு! 16 வயது சச்சினுக்கு பாக். ஸ்பின்னர் கொடுத்த அட்வைஸ்.. அடுத்த ஓவரில் 4 சிக்ஸ்

டெல்லி : பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் அப்துல் காதிர், இளம் சச்சினை சிக்ஸ் அடிக்குமாறு கூறிய சம்பவம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் அப்துல் காதிர் நேற்று காலமானார். அவருக்கு 63 வயது. அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், பலனின்றி உயிர் இழந்தார்.

சச்சின் - அப்துல் காதிர் சம்பவம்

சச்சின் - அப்துல் காதிர் சம்பவம்

அவரை குறித்த சில சுவாரசிய சம்பவங்கள் ரசிகர்கள் இடையே பேசப்பட்டு வருகிறது. அதில் 16 வயது இளம் சச்சின் - அப்துல் காதிர் இடையே 1989இல் நடந்த சம்பவம் பற்றி கூறப்படுகிறது. அது என்ன சம்பவம்?

நட்பு ரீதியான போட்டி

நட்பு ரீதியான போட்டி

1989ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றது. அங்கே பெஷாவரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நட்பு ரீதியான ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதற்கு ஐசிசி அந்தஸ்து கிடையாது. அதனால், வெற்றி - தோல்வி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

அறிமுக வீரர்

அறிமுக வீரர்

சச்சின் அப்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அவரது முதல் போட்டியே பாகிஸ்தான் அணிக்கு எதிரானது தான். அந்த தொடரில் தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது. அப்துல் காதிர் அப்போது புகழ் பெற்ற சுழற் பந்துவீச்சாளர் ஆவார்.

10 வகையாக பந்துவீச்சு

10 வகையாக பந்துவீச்சு

லெக் ஸ்பின்னர் ஆன அப்துல் காதிர் 10 வகையாக பந்தை வீசுவார். தன் தனித்துவமான சுழற் பந்துவீச்சால் மந்திரக் கை பந்துவீச்சாளர் என்று புகழ் பெற்றவர். இந்த நிலையில், அந்தப் போட்டியில் சச்சினுக்கு பந்து வீச வேண்டிய ஓவருக்கு முன் ஒரு விஷயத்தை கூறினார்.

என்ன சொன்னார் காதிர்?

என்ன சொன்னார் காதிர்?

"இது ஒருநாள் போட்டி அல்ல. அதனால், அடுத்த ஓவரில் நீ என் பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சிக்கலாம். அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய நட்சத்திரம் ஆகி விடுவாய்" என கூறி இருக்கிறார் அப்துல் காதிர்.

எதிரணி வீரருக்கு அறிவுரை

எதிரணி வீரருக்கு அறிவுரை

சிறுவனாக இருந்த சச்சினுக்கு இது வியப்பாக இருந்திருக்கலாம். காரணம், நட்பு ரீதியான போட்டி என்றாலும், பாகிஸ்தான் அணி என்றால் ஒரு உரசல், சீண்டல் இருக்கும். மேலும், எதிரணி வீரருக்கு உதவும் வகையில் ஒருவர் அறிவுரை கூறுவாரா?

4 சிக்ஸர்கள் விளாசினார்

4 சிக்ஸர்கள் விளாசினார்

சச்சின் அதை சவாலாக எடுத்துக் கொண்டார். அப்போது போட்டியில் 5 ஓவர்களில் 70 ரன்கள் எடுக்க வேண்டும். எப்படியும் அடித்து ஆடி தான் ஆக வேண்டும். எனவே, அப்துல் காதிர் சொன்னது போல அவர் ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசினார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அந்தப் போட்டியில் சச்சின் 18 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இந்தியா அந்தப் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், சச்சினுக்கு பெயர் கிடைத்தது. சச்சினின் திறமை தான் அந்த சிக்ஸர்களுக்கு காரணம் என பின்னாட்களில் அப்துல் காதிர் கூறினார்.

இம்ரான் கானின் விருப்பம்

இம்ரான் கானின் விருப்பம்

அப்துல் காதிர் 67 டெஸ்ட் போட்டிகளில் 236 விக்கெட்களும், 104 ஒருநாள் போட்டிகளில் 132 விக்கெட்களும் எடுத்துள்ளார். இவர் தான் அப்போதைய கேப்டன் இம்ரான் கானின் விருப்பமான சுழற் பந்துவீச்சாளர் என கூறப்படுவது உண்டு.

Story first published: Saturday, September 7, 2019, 15:12 [IST]
Other articles published on Sep 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+