Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவெல்லாம் என் முன்னாடி குழந்தைப்புள்ள.. அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்.. பாக் வீரர் பரபர பேச்சு!

கராச்சி : முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் சிறந்த ஆல் - ரன்வுண்டரக பாகிஸ்தான் அணியில் இருந்தார்.

தற்போது ஓய்வு பெற்று விட்ட அவர், ஏதாவது உளறிக் கொட்டி ஊடக வெளிச்சத்தில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.

தற்போது உலகின் நம்பர் 1 ஒருநாள் போட்டி பந்துவீச்சாளராக இருக்கும் பும்ராவை "குழந்தை பவுலர்" எனக் கூறி வாய்க்கு வந்தபடி பேட்டி கொடுத்துள்ளார்.

மிரட்டும் பும்ரா

மிரட்டும் பும்ரா

பும்ரா இன்று உலகையே மிரட்டும் பந்துவீச்சாளராக இருக்கிறார். அவரை பாராட்டாத கிரிக்கெட் வீரர்களே இல்லை எனும் நிலையே உள்ளது. ஒருநாள் போட்டிகளில் மட்டுமே முன்பு ஆதிக்கம் செலுத்தி வந்த அவர், கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளையும் கலக்கி வருகிறார்.

நம்பர் 1 பவுலர்

நம்பர் 1 பவுலர்

ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கிறார் பும்ரா. டெஸ்ட் தரவரிசையிலும் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறார். தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார் பும்ரா.

அப்துல் ரசாக் பேட்டி

அப்துல் ரசாக் பேட்டி

இந்த நிலையில், பும்ரா குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்ட அப்துல் ரசாக், அவரை விட பெரிய பந்துவீச்சாளர்களை எல்லாம் எதிர்த்து ஆடி இருக்கிறேன். அவரை எளிதாக ஆதிக்கம் செலுத்தி ஆடுவேன் என அடாவடியாக பேசி இருக்கிறார்.

உலகத்தரமான பந்துவீச்சாளர்கள்

உலகத்தரமான பந்துவீச்சாளர்கள்

"என் காலத்தில் உலகத்தரமான பந்துவீச்சாளர்களை சந்தித்த பின், பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளரை சந்திப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் மீது தான் அழுத்தம் இருக்கும்" எனக் கூறி இருக்கிறார் அப்துல் ரசாக்.

குழந்தை பவுலர்

குழந்தை பவுலர்

சிறந்த பந்துவீச்சாளர்களான கிளென் மெக்கிராத், வாசிம் அக்ரம் ஆகியோருக்கு எதிராக நான் ஆடி இருக்கிறேன். அதனால், என் முன் பும்ரா குழந்தை பவுலர். அவரை எளிதாக ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடுவேன்" எனக் கூறினார் அப்துல் ரசாக்.

பும்ரா பவுலிங்

பும்ரா பவுலிங்

பும்ரா பந்துவீச்சு குறித்து பேசிய அவர், "பும்ரா சிறப்பாக பந்து வீசுகிறார். நிறைய முன்னேறி இருக்கிறார். அவர் விசித்திரமான பந்துவீச்சை கொண்டுள்ளார். பந்தின் தையல் பகுதியை சரியாக கீழே அடிக்கிறார். அதனால் தான் அவரது பந்துவீச்சு சிறப்பாக உள்ளது" என்றார்.

பண்டியாவுக்கு பயிற்சி

பண்டியாவுக்கு பயிற்சி

அப்துல் ரசாக் இது போல கன்னாபின்னாவென யோசிப்பது புதிது கிடையாது. உலகக்கோப்பை தொடரின் போது ஹர்திக் பண்டியாவிடம் குறை உள்ளது. அவருக்கு பயிற்சி அளிக்க பிசிசிஐ வாய்ப்பு கொடுத்தால் அவரை உலகின் சிறந்த ஆல் - ரவுண்டராக மாற்றிக் காட்டுவேன் என கூறியவர் தான் இந்த ரசாக்.

Story first published: Wednesday, December 4, 2019, 19:32 [IST]
Other articles published on Dec 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+