For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் காஷ்மீரிலிருந்து வந்த ஹீரோ அப்துல் சமத்.. கடைசியில் வென்றது எப்படி.. வெற்றி ரகசியம் என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடைசி ஓவரில் விளையாடிய அப்துல் சமத் இரண்டு சிக்ஸர்களை அடித்து அசத்தினார்.

அதுவும் கடைசி பந்து நோபால் என அறிவிக்கப்பட்டதால், அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு அவர் மீண்டும் சன்ரைசர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். காஷ்மீரில் இருந்து வந்த அப்துல் சமத் அதிரடியாக விளையாடக் கூடியவர்.

Abdul samad becames hero once again for srh fans as he reveals the final moment

ஏற்கனவே தனது திறமையை முந்தைய சீசன்களில் அவர் நிரூபித்து இருந்தாலும் இந்தத் தொடரில் அவர் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் முக்கியமான ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு அவர் 7 பந்துகளில் 17 ரன்கள் குவித்து வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். கடைசி பந்தில் முதலில் அப்துல் சமத் கேட்ச் ஆனார். அதன் பிறகு தான் அது நோபால் என அவருக்கு தெரிய வந்தது.

இது குறித்து பேசிய அவர், நான் பேட்டிங் செய்யும்போது சுலபமான சூழல் நிலவ வில்லை. கடும் நெருக்கடியில் தான் நாங்கள் இருந்தோம். ஆனால் பிலிப்ஸ் சிறப்பாக விளையாடி எங்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்து சென்றார். கடைசி ஓவரில் நெருக்கடியில் இருக்கும் பவுலர் ஏதேனும் தவறு செய்வார் என்று நினைத்தேன். பேட்ஸ்மேனுக்கு ஏற்ற இடத்தில் அவர் பந்து வீசுவார் என காத்திருந்தேன்.

மேலும் கடைசி பந்து நோபால் ஆக ஆனது உண்மையிலே அதிர்ஷ்டம் தான். நான் ஆட்டம் முடிந்து விட்டது என நடுவரை தாண்டி செல்லும்போது தான் இது நோபல் மீண்டும் களத்துக்கு செல்லுங்கள் என நடுவர் கூறினார். நான் எதிர் திசைக்கும் யான்சன் பேட்டிங் செய்யும் திசைக்கும் ஓடிவிட்டோம். இதனால் நடுவரிடம் எத்தனை ரன்கள் கொடுத்தீர்கள்.

கடைசி பதில் எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என நாங்கள் கேட்டோம். அதற்கு நோபால் வீசியதற்கு ஒரு ரன் மட்டும் தான் கொடுப்போம். ஏனென்றால் அந்த பந்து கேட்ச் ஆனதால் நீங்கள் ஓடியதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம். கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவை என அவர் கூறினார். இதனை அடுத்து மீண்டும் சந்திப் ஷர்மா நான் அடிப்பதற்கு ஏதுவான பந்தை வீசுவார் என நான் முன்கூட்டியே கணித்து காத்துக் கொண்டிருந்தேன்.

நல்ல வேலையாக அது சிக்ஸருக்கு சென்றது. கிளன் பிலிப்ஸ் இன் ஆட்டம் தான் எங்களுக்கு வெற்றியை தேடி கொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் நாங்கள் இன்னும் தொடரில் இருக்கிறோம். இந்த உத்வேகத்தை இனிவரும் போட்டிகளுக்கும் கொண்டு செல்ல நினைக்கிறோம் என்று அப்துல் சமத் கூறினார்.

Story first published: Monday, May 8, 2023, 0:18 [IST]
Other articles published on May 8, 2023
English summary
Abdul samad becames hero once again for srh fans as he reveals the final moment மீண்டும் காஷ்மீரிலிருந்து வந்த ஹீரோ அப்துல் சமத்.. கடைசியில் வென்றது எப்படி.. வெற்றி ரகசியம் என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+