Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உண்மையில எல்லாமே அதிசயமா இருக்கு... மனைவியுடன் புகைப்படத்தை பகிர்ந்த பும்ரா!

டெல்லி : கடந்த 15ம் தேதி இந்திய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசனின் திருமணம் கோவாவில் நடைபெற்றது.

திருமணம் குறித்து வாய்திறக்காமல் பல்வேறு யூகங்களுக்கு இடமளித்த பும்ரா, தனது திருமணம் குறித்த அறிவிப்பை கடந்த 15ம் தேதி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது மனைவியுடனான புகைப்படத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பும்ரா, அனைத்துமே அதிசயமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

யூகங்களுக்கு இடமளித்த திருமணம்

யூகங்களுக்கு இடமளித்த திருமணம்

இந்திய அணியின் முக்கிய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டெஸ்ட் போட்டியின் இரு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். இதையடுத்து தனது திருமணத்தை முன்னிட்டு அவர் விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் அவரது திருமணம் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

பல்வேறு யூகங்கள்

பல்வேறு யூகங்கள்

அவர் திருமணம் செய்யும் நபர் குறித்து பல்வேறு யூகங்களை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் ஏற்படுத்தினர். ஆனால் அவர் இதுகுறித்து அவர் வாய் திறக்காமல் இருந்தார். அவரது திருமணம் கடந்த 15ம் தேதி நடைபெற்ற நிலையில், அவர் சஞ்சனா கணேசனை மணமுடித்து அதுகுறித்து அறிவிப்பையும் வெளியிட்டு அனைத்து யூகங்களுக்கும் தடை போட்டார்.

அதிசயமாக உள்ளது

இந்நிலையில் தற்போது அவர் தனது மனைவி சஞ்சனாவுடன் தான் இருக்கும் புகைகப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்கள் மிகவும் அதிசயமானதாக உள்ளதாக அவர் தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களிடம் இருந்து தங்களுக்கு கிடைத்துள்ள அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ரன்வீர் சிங் எதிர்பார்ப்பு

ரன்வீர் சிங் எதிர்பார்ப்பு

தன்னுடைய திருமணத்தையொட்டி டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி, டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களிலும் அவர் பங்கேற்கவில்லை. அடுத்ததாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3வது டி20 போட்டியின் தோல்வியை அடுத்து பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங், பும்ரா இந்திய அணியில் மீண்டும் இணைந்தால் அனைத்தும் சிறப்பாகிவிடும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 19, 2021, 19:32 [IST]
Other articles published on Mar 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+