ஐபிஎல் தொடக்க விழாவில் எமி ஜாக்ஸன் அசத்தல் நடனம்
ஹைதராபாத்: 10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. தொடக்க விழாவின்போது நடிகை எமி ஜாக்சன் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தங்க நிற ஆடையில் ஜொலித்தபடி அவர் ஆடிய குழு நடனம் ரசிகர்களை ஈர்த்தது.

சிவப்பு, மஞ்சள் வண்ணத்திலான கலர்ஃபுல் குடைகளை பிடித்தபடி சக நாட்டிய கலைஞர்கள் ஆட எமி ஜாக்ஷன் தனது குழுவினரோடு ரசிகர்களை மகிழ்வித்தார்.

தமிழ் மற்றும், தெலுங்கு மொழிகளில் எமி ஜாக்ஷன் பிரபலமான நடிகை என்பதால் ஹைதராபாத் ரசிகர்கள் விசில் சத்தத்தால் அரங்கம் அதிர்ந்தது.

Story first published: Thursday, April 6, 2017, 16:26 [IST]
Other articles published on Apr 6, 2017


Click it and Unblock the Notifications