Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன ரியல் மேட்ரிட் வாடை அடிக்குது.. வான்கடே வானில் மிதக்கும் இந்திய அணி ஜெர்சி.. ரசிகர்கள் கிண்டல்!

மும்பை: அடிடாஸ் நிறுவனம் தரப்பில் வெளியாகியுள்ள இந்திய டெஸ்ட் அணியின் புதிய ஜெர்சி, பிரபல கால்பந்து அணியான ரியல் மேட்ரிட் அணியின் ஜெர்சியை போன்று இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணிக்கான கிட் ஸ்பான்சராக நைக் நிறுவனம் கடந்த 2016-ல் இருந்து 2020 வரை இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இருந்து வந்த நிலையில் அதன் ஒப்பந்தம் முடிந்தது. இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் இருந்து வருகிறது.

Adidas Companys New Indian Test Team Jersey is same like Real Madrid club Jersey

இந்நிலையில் இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. ஜூன் 7ஆம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது. 2023ஆம் ஆண்டு முதல் 2028ஆம் வரை என்று, 5 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.350 கோடி என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அடிடாஸ் நிறுவனம் தயாரித்த இந்திய அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய பயிற்சி ஜெர்சியை வீரர்கள், பயிற்சியாளர்கள் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனத்தின் புதிய பயிற்சி ஆடைகளில் இந்திய வீரர்கள் ஸ்மார்ட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Adidas Companys New Indian Test Team Jersey is same like Real Madrid club Jersey

இந்த நிலையில் வான்கடே மைதானத்தில் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு என்று 3 வகையான புதிய ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள ஜெர்சிகள் ஆகாயத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. இதனை சாலையில் இருந்து பார்த்தவாறு கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே விராட் கோலி புதிய டெஸ்ட் ஜெர்சியை அணிந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த ஜெர்சி கிட்டத்தட்ட பிரபல கால்பந்து கிளப் அணியான ரியம் மேட்ரிட் அணியின் வெள்ளை நிற ஜெர்சியை போன்று உள்ளது. இதனால் கால்பந்து ரசிகர்கள் அடிடாஸ் நிறுவனத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, June 1, 2023, 18:56 [IST]
Other articles published on Jun 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+