சச்சின் சாதனையை முறியடித்த இளம் ஆப்கன் வீரர்.. ஆனா சங்ககாரா தான் ரொம்ப பிடிக்குமாம்!
Recommended Video
லீட்ஸ் : ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் இக்ரம் அலிகில் உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடினார்.
இந்தப் போட்டியில் அரைசதம் கடந்த அவர், சச்சினின் உலகக்கோப்பை சாதனை ஒன்றை முறியடித்து அசத்தி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கன் அணி கடைசி வரை போராடி தோல்வி அடைந்தது.

ஆப்கன் - வெ.இண்டீஸ்
இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 311 ரன்கள் குத்தது. அடுத்து ஆடிய ஆப்கன் அணி கடைசி வரை போராடியது. எனினும், கடைசி 10 ஓவர்களில் விக்கெட்களை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இக்ரம் அலிகில் பேட்டிங்
இந்தப் போட்டியில் இரு அணிகளையும் சேர்த்து, ஆப்கன் வீரர் இக்ரம் அலிகில் தான் அதிக ரன்கள் எடுத்து இருந்தார். அவர் 93 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 80 ரன்களுக்கும் மேல் எடுத்த மிக இள வயது வீரர் என்ற சாதனையை செய்தார்.

சச்சின் சாதனை முறியடிப்பு
முன்னதாக இந்த சாதனை சச்சின் வசம் இருந்தது. 1992 உலகக்கோப்பையில் சச்சின் தன் 18 வயது, 318வது நாளில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 81 ரன்கள் எடுத்து இருந்தார். அதுவே இளம் வயதில் எடுக்கப்பட்ட அதிகபட்ச உலகக்கோப்பை ரன்கள். அந்த சாதனையை முறியடித்துள்ள இக்ரம் தன் 18 வயது 278வது நாளில் 86 ரன்கள் எடுத்தார்.

சங்ககாரா ரசிகர்
சச்சின் போன்ற ஜாம்பவானின் சாதனையை முறியடித்து மகிழ்ச்சி அளிக்கிறது என்ற இடது கை பேட்ஸ்மேன் இக்ரம், இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாராவின் தீவிர ரசிகராம். இந்தப் போட்டியிலும் அவரை நினைத்துக் கொண்டே ஆடியதாக தெரிவித்தார்.

ஆப்கன் நிலை
ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் எதிர்பார்ப்புக்கு மாறாக மிக மோசமாக செயல்பட்டது. பல சர்ச்சைகளுக்கு நடுவே விளையாடிய அந்த அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.


Click it and Unblock the Notifications