Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாபெரும் சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் அல்லா கசன்ஃபர்.. 19 வயதுக்குள் 2 முறை 5 விக்கெட்

ஹராரே: ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அல்லா கசன்ஃபர் மாபெரும் பவுலிங் சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். உலகிலேயே 18 வயதுக்குள் இரண்டு முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.

இவரை மும்பை இந்தியன்ஸ் அணி, 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் 4.80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வே-வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.

afg vs zim allah ghazanfar mumbai indians

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது அபாரமாக பந்து வீசிய அல்லா கசன்ஃபர் 10 ஓவர்களில் 33 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அவரது அபாரமான பந்து வீச்சால் திணறிய ஜிம்பாப்வே அணி 30.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

128 ரன்கள் என்ற சிறிய இலக்கை சேஸிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 27 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி வெற்றி பெற்றது. மேலும், இந்த ஒருநாள் தொடரை 2 - 0 என கைப்பற்றியது. அல்லா கசன்ஃபர் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அறிமுகம் பெற்ற நிலையில், இரண்டாவது முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

19 வயதே ஆகும் நிலையில் அல்லா கசன்ஃபர் இதற்கு முன் செப்டம்பர் மாதம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார். தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மீண்டும் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் கிரிக்கெட் உலகில் மிகக் குறைந்த வயதில் இரண்டு முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.

முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் ஆனது 19 வது வயதுக்குள் 5 முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தது இருந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் 19 வயதுக்குள் 2 முறை ஐந்து விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார்.

19 வது வயதுக்குள் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்திய சாதனையை ஏழு பந்துவீச்சாளர்கள் செய்துள்ளனர். ரஷீத் கான், வக்கார் யூனிஸ், அல்லா கசன்ஃபர் ஆகியோரை தவிர்த்து, முஜிஃபுர் ரஹ்மான், குல்ஷன் ஜா, வாசிம் அக்ரம் மற்றும் அப்தாப் அஹ்மத் ஆகியோர் இந்த சாதனையை ஒரு முறை செய்துள்ளனர்.

அல்லா கசன்ஃபர் இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவர் இன்னும் சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகவில்லை. 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். 2025 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை 4.80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.

Story first published: Sunday, December 22, 2024, 12:54 [IST]
Other articles published on Dec 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+