Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த ஒரு இந்திய வீரரை ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்துடுங்க! எங்க டீமில் இருக்க ஆசை - AFG கேப்டன் கருத்து

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஆப்கானிஸ்தான் அணி மிகப்பெரிய வெற்றிகளை பெரிய அணிகளுக்கு எதிராக பெற்று வருகிறது. அண்மையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி உள்ளது.

எனினும் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக இன்னும் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கூட வெல்லவில்லை. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் ஹஸ்மதுல்லா, பயிற்சியாளர் ஜனார்த்தன் டிரட், அணியின் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர்.

ind vs ban india vs bangladesh cricket rohit sharma virat kohli


இந்த நிலையில் youtube சேனல் ஒன்று ஹஸ்மத்துல்லா பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அப்போது இந்திய அணி வீரர் யாராவது ஒருவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு வேண்டுமென்றால் யாரை கேட்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஹஸ்மத்துல்லா, ஒருவர் அல்ல பலர் இருக்கிறார்கள். ஆனால் ஒருவர் வேண்டுமென்றால் நான் விராட் கோலியை தான் தேர்வு செய்வேன்.

கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார் என்ற புள்ளிவிவரத்தை பாருங்கள். அவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் கடந்து இருக்கிறார். அது யாராலையும் தொட முடியாத மிகப்பெரிய சாதனையாகும். சதம் அடிப்பது குறித்து யார் வேண்டுமானாலும் வாயால் சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் மைதானத்திற்கு சென்று சதம் சதமாக அடிப்பது என்பது உண்மையிலே முடியாத காரியம்.

அதுவும் 50 முறை இதனை விராட் கோலி நிகழ்த்தி இருக்கிறார் என்றால் அது மிகப் பெரிய சாதனை.விராட் கோலிக்காக அவருடைய புள்ளி விவரங்களே பேசும் என்று ஹஸ்மத்துல்லா கூறியிருக்கிறார். 35 வயதான விராட் கோலி இதுவரை 534 சர்வதேச போட்டிகளில் விளையாடி 26 ஆயிரத்து 965 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் 80 சதம், 140 அரைசதங்களும் அடங்கும். சராசரி 53 என்று அளவில் இருக்கிறது.விராட் கோலி தற்போது வங்கதேச தொடரில் விளையாடி வருகிறார். சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 6 மற்றும் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் கான்பூரில் தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார்.

Story first published: Wednesday, September 25, 2024, 9:30 [IST]
Other articles published on Sep 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+