Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை பங்கமாக கலாய்த்த ஆப்கான் வீரர் நவீன்.. இன்ஸ்டாவில் தக்க பதிலடி.. தொடரும் வன்மம்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கிற்கு விராட் கோலிக்கும் ஏற்பட்ட மோதல் தற்போது தொடர்ந்து கொண்டே வருகிறது.

ஆர் சி பி அணி லக்னோவில் விளையாடிய போது விராட் கோலி மோசமாக நடந்து கொண்டார். இதற்கு நவீன் உல் ஹக் பதிலடி கொடுத்தார். இந்த மோதலில் கம்பீர் சேர்ந்து கொண்டு விராட் கோலிக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

Afghanistan cricketer Naveen ul haq hits back virat kohli in style

இந்த நிலையில் லக்னோவும் குஜராத் அணியும் சமீபத்தில் மோதிக்கொண்டனர். இதில் லக்னோ அணி, படுதோல்வியை தழுவியது. இந்த போட்டியை ஹோட்டலில் கண்ட விராட் கோலி குஜராத் அணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தார். லக்னோ அணியினரை வெறுப்பேற்றும் வகையில் குஜராத் அணியை கோலி பாராட்டி வந்தார்.

எந்த போட்டிக்கும் இது போல் செய்யாத விராட் கோலி வேண்டுமென்றே லக்னோவை வெறுப்பேற்றும் வகையில் அன்று நடந்து கொண்டார். இந்த நிலையில் இதற்கு லக்னோ அணியின் நவீன் உல் ஹக் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இன்று மும்பை அணியும் பெங்களூர் அணியும் பலப் பரிட்சை நடத்துகிறது. இதில் முதலில் பேட் செய்த விராட் கோலி நான்கு பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

Afghanistan cricketer Naveen ul haq hits back virat kohli in style

இந்த போட்டியை பார்க்கும் லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக், விராட் கோலி செய்தது போல் இவரும் போட்டோ எடுத்து மாம்பழத்தை ருசியாக சாப்பிடுவதை பதிவாக இன்ஸ்டாகிராமில் போட்டு உள்ளார். இது விராட் கோலியின் விக்கெட்டை கொண்டாடும் பொருள்படும் வகையில் உள்ளது. இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரசிகர்கள் விராட் கோலி வன்மத்தை கட்டியதற்கு தற்போது ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் திருப்பி கொடுத்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சண்டையை சின்னப்பிள்ளை போல் விராட் கோலியும் நவின் உல் ஹக்கும் இழுத்துக் கொண்டே போவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

Story first published: Tuesday, May 9, 2023, 20:46 [IST]
Other articles published on May 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+