For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20யைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டியிலும் அயர்லாந்தை வீழ்த்தும் ஆப்கானிஸ்தான்

பெல்பாஸ்ட்: ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முதலாவது ஒருநாள் போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது.

Afghanistan won first odi against Ireland

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை குவித்தது. அந்த அணியின் நைபி 64 ரன்களையும் ஷாஹிடி 54 ரன்களையும் குவித்தனர். அயர்லாந்து தரப்பில் முரதக்ஹ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதனால் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Story first published: Tuesday, August 28, 2018, 9:13 [IST]
Other articles published on Aug 28, 2018
English summary
Afghanistan continue its victory on ODI too
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X