Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏம்பா அப்ரிடி!! நமக்கு எதுக்கு காஷ்மீர் அரசியல்.. பேசாம கிரிக்கெட்ல கவனம் செலுத்தலாமே

கராச்சி: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி காஷ்மீர் பற்றி இந்தியாவிற்கு எதிராக கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் வீரர் மியான்தத் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தை பற்றி பேசாதே என பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரே கூறி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அப்ரிடி விஷயத்தில், கிரிக்கெட் வீரர்கள் அரசியல் பேசாமல் இருப்பது நல்லது என கூறியுள்ளார் மியான்தத். மியான்தத் ஏற்கனவே அப்ரிடி மேட்ச் பிக்ஸிங் செய்தார் எனக் கூறி அந்த விவகாரம் பெரிதாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

அப்ரிடி சர்ச்சை பேச்சு

அப்ரிடி சர்ச்சை பேச்சு

அப்ரிடி காஷ்மீர் பற்றி பேசிய வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் பரவியது. வடஇந்திய ஊடகங்கள் இதைப் பற்றி விவாதித்ததால் பரபரப்பு பற்றிக் கொண்டது.

அப்ரிடி விளக்கம்

அப்ரிடி விளக்கம்

பின்னர் அப்ரிடி இதற்கு விளக்கம் அளித்தார். தான் பேசிய முழு காட்சிகள் அந்த வீடியோவில் இல்லை என கூறினார். எனினும், அவரது கருத்துக்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சர்ச்சைக்கு உள்ளானது.

அப்ரிடி தவிர்த்து இருக்கலாம்

அப்ரிடி தவிர்த்து இருக்கலாம்

இந்த விவகாரம் பற்றி மியான்தத் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை அப்ரிடி இந்த விஷயங்களை பேச சரியான ஆள் இல்லை. இதை அவர் தவிர்த்து இருக்கலாம்" என கூறினார்.

கிரிக்கெட் வீரர்கள் பேசாமல் இருப்பது நல்லது

கிரிக்கெட் வீரர்கள் பேசாமல் இருப்பது நல்லது

மேலும், "கிரிக்கெட் வீரர்கள் அரசியல் மற்றும் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. அவர்கள் ஓய்வு பெறும் வரை அல்லது ஓய்வை அடுத்து என்ன செய்யப் போகிறோம் என முடிவு செய்யும் வரை கிரிக்கெட் மீது கவனம் செலுத்துவது நல்லது" என மியான்தத் கூறியுள்ளார். அப்ரிடியின் காலை வாரிவிட நேரம் பார்த்து காத்திருந்த மியான்தத் இந்த விவகாரத்தில் அறிவுரை கூறி தன் ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார்.

போதை தலைக்கேறிய அப்ரிடி.. பாக். பிரதமர் அருகே உட்கார்ந்து செய்த செயலை பாருங்கள்

Story first published: Saturday, November 17, 2018, 19:13 [IST]
Other articles published on Nov 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+