Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நண்பா! உன்ன இந்த இடத்துல பார்ப்பேன்னு நினைக்கல.. குதூகலித்த கேஎல் ராகுல்!

மும்பை : முதுகில் காயம் காரணமாக போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வெடுத்துவரும் ஹர்திக் பாண்டியா, நேற்று நடைபெற்ற இந்தியா -மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கான 3வது சர்வதேச டி20 போட்டியில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.எல். ராகுலை பேட்டியெடுத்தார்.

கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் நல்ல நண்பர்களாக உள்ள நிலையில், தன்னை ஹர்திக் பாண்டியா பேட்டி எடுத்தது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக கே.எல்.ராகுல் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதனிடையே, 3வது சர்வதேச டி20 போட்டியில் தான் 56 பந்துகளில் 91 ரன்கள் அடித்ததற்கு தன்னுடன் ஆடிய ரோகித் ஷர்மாவே காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 3வது சர்வதேச டி20 போட்டி

3வது சர்வதேச டி20 போட்டி

மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்று மோதிய 3வது சர்வதேச டி20 போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி கண்டுள்ளது.

 ஆட்ட நாயகனாக தேர்வு

ஆட்ட நாயகனாக தேர்வு

இந்த போட்டியில் 56 பந்துகளில் 91 ரன்களை கே.எல். ராகுல் விளாசினார். போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், கே.எல். ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 அணியினரை ஊக்குவித்த ஹர்திக்

அணியினரை ஊக்குவித்த ஹர்திக்

முதுகில் காயம் காரணமாக இந்த போட்டியில் தான் விளையாடாவிட்டாலும், பார்வையாளராக வந்து இந்திய அணியினரை இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா ஊக்குவித்தார்.

பிசிசிஐ வலைதளத்தில் பதிவு

இந்த போட்டியில் இந்தியா 67 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட கே.எல்.ராகுலை ஹர்திக் பாண்டியா பேட்டி கண்டார். இந்த வீடியோ பின்பு பிசிசிஐ வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது.

 சிறந்த நண்பனின் ஊக்கம்

சிறந்த நண்பனின் ஊக்கம்

தன்னுடைய சிறந்த நண்பனான ஹர்திக் பாண்டியா, பார்வையாளராக அமர்ந்திருந்து அணியினரை ஊக்குவித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக கே.எல். ராகுல் தெரிவித்தார்.

 பேட்ஸ்மேனாக கிடைத்த சுதந்திரம்

பேட்ஸ்மேனாக கிடைத்த சுதந்திரம்

இந்த போட்டியில் தான் அதிக ரன்களை குவிக்க ரோகித் ஷர்மாவே காரணம் என்றும் பேட்டியின்போது ராகுல் தெரிவித்தார். சிறந்த ஆட்டக்காரரான ரோகித் ஷர்மாவை அவுட் செய்வதற்கான தீவிர முயற்சியில் எதிரணியினர் ஈடுபட்டிருக்க, தான் சுதந்திரமாக ரன்களை எடுக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இதற்கு முன்பு கண்டதில்லை"

மேலும் இந்த ஆட்டத்தில் கோலியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் அவர் இதுபோல ஆடி தான் முன்னதாக கண்டதில்லை என்றும் ராகுல் தனது பேட்டியில் குறிப்பிட்டார். முதல் பந்திலிருந்தே கோலி அடித்து ஆடியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

 கே.எல். ராகுல் கோரிக்கை

கே.எல். ராகுல் கோரிக்கை

காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ள ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா இருவரும் விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே அணி வீரர்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

Story first published: Thursday, December 12, 2019, 20:02 [IST]
Other articles published on Dec 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+