"41 வயசுல தல சிக்ஸ் அடிக்கிறாரு.. உனக்கு என்ன கேடு" ஜடேஜாவை வெளுக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 167 ரன்களை எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

டெல்லி அணிக்கு எதிராக இளம் அதிரடி வீரர் சிவம் துபே 12 பந்துகளில் 25 ரன்கள் விளாசி அசத்தினார். அதில் மூன்று சிக்சர்களும் அடங்கும். இதனை 83 படத்தில் ஜீவா, "எனக்கு டிஃபென்ஸ் ஆட வராது" என்று சொல்லுவார். அதனை அப்படியே சிவம் துபே, "எனக்கு டிஃபென்ஸ் ஆட வராது" என்று பேசுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

சில ஆண்டுகளுக்கு முன் ஆர்சிபி அணிக்காக மொயின் அலியும், கொல்கத்தா அணிக்காக குல்தீப் யாதவும் ஆடியுள்ளனர். அப்போது குல்தீப் யாதவ் வீசிய ஒரே ஓவரில் மொயின் அலி 26 ரன்களை விளாசினார். அதனால் மனமடைந்த குல்தீப் யாதவ், மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் மொயின் அலியை 7 ரன்கள் வீழ்த்தி குல்தீப் யாதவ் அசத்தியுள்ளார். இந்த இரு சம்பவங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.

இன்றையப் போட்டியில் கடைசி பந்தில் களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே, இடதுகை பேட்ஸ்மேன் என்பது தெரிய வந்தது. வலதுகை வேகப்பந்துவீச்சாளரான அவர், திடீரென இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால், சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள், "துஷாரு.. நீ இடதுகை பேட்ஸ்மேனா" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ரா சக்க ரகம்.

அதேபோல் கடைசி நேரத்தில் களமிறங்கிய தோனி, 9 பந்துகளில் 20 ரன்கள் விளாசி அசத்தினார். ஆனால் மொயின் அலி 12 பந்துகளில் 7 ரன்களிலும், ஜடேஜா 16 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனை சுப்ரமணியபுரம் படத்தில் வரும் டும்கான் கதாபாத்திரம் கஞ்சா கருப்புவை பார்த்து, "இந்த கால வச்சுட்டு நானே உழைச்சு சாப்பிடனும்னு இருக்கேன்.. உங்களுக்கு என்னடா கேடு" என்று வசனம் பேசுவார். அதனை அப்படியே மாற்றி, ஜடேஜா மற்றும் மொயின் அலியை பார்த்து தோனி, "இந்த வயசுல நானே அடிக்கும் போது உங்களுக்குலாம் என்னடா கேடு" என்று கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் நக்கல் ரகம்.


Click it and Unblock the Notifications