Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ல் மதிக்கவே இல்ல... இலங்கை பக்கம் திரும்பிய சீனியர் வீரர்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

மும்பை: ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காததால் இந்திய முன்னாள் வீரர் ஒருவர் இலங்கை பக்கம் திரும்பியுள்ளார்.

உலகில் மிகவும் பிரபலமான, செல்வம் குவியக்கூடிய உள்நாட்டு தொடராக ஐபிஎல் விளங்கி வருகிறது.

இதில் திறைமையான இளம் வீரர்களின் வரவு அதிகரித்துள்ளதால் சீனியர் வீரர்களின் வாய்ப்புகள் பறிபோய் வருகிறது.

யூசுப் பதான்

யூசுப் பதான்

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் மிகவும் முக்கியமானவராக திகழ்ந்தவர் யூசுப் பதான். கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய இவர், 57 ஒருநாள் போட்டிகள் மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பேட்டிங்கில் அதிரடி காட்டுவது மட்டுமின்றி அணிக்கு தேவையான நேரங்களில் சுழற்பந்துவீச்சிலும் அசத்தியுள்ளார்.

கண்டுக் கொள்ளப்படாத வீரர்

கண்டுக் கொள்ளப்படாத வீரர்

அதிரடி ஆட்டக்காரராக இருந்ததால் ஐபிஎல்-ல் யூசுப் பதானுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் 2019ஆம் ஆண்டு வரை 174 போட்டிகளில் விளையாடியுள்ள யூசப் பதான் 3,204 ரன்களை குவித்தது மட்டுமின்றி பல விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஆனால் 38 வயதாகும் அவருக்கு இனி ஃபார்ம் சரியாக இருக்காது என்ற காரணத்தினால் 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு ஐபிஎல் அணியும் அவரை ஏலம் எடுக்காமல் உள்ளது.

புதிய முடிவு

புதிய முடிவு

இந்நிலையில் ஐபிஎல் தொடர் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் வேறு வழியை தேடி சென்றுள்ளார் யூசுப் பதான். இலங்கை உள்நாட்டு தொடரான இலங்கை ப்ரீமியர் லீக்கின் 2வது சீசனில் ஏலம் எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

ஐபிஎல்-ல் அதிரடி காட்டி வந்த யூசுப் பதான், தனியாக பயிற்சிகளை அவ்வபோது மேற்கொண்டு தான் வருகிறார். எனவே எந்த அணியாவது அவரை ஏலத்தில் எடுத்தால் நிச்சயம் இலங்கை ப்ரீமியர் லீக் தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

Story first published: Sunday, July 4, 2021, 17:34 [IST]
Other articles published on Jul 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+