For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெஸ்ட் இண்டீஸை.. வெள்ளை அடிக்காம விட மாட்டோம்.. கோஹ்லி

ஆன்டிகுவா: முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதோடு நிற்க மாட்டோம். 4 போட்டிகளையும் வென்று மேற்கு இந்தியத் தீவுகளை ஒயிட் வாஷ் செய்யவே வி்ரும்புகிறோம் என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை அட்டகாசமாக வென்றுள்ளது கோஹ்லி தலைமையிலான இந்தியப் படை. இந்த வெற்றி தந்த உற்சாகத்தால் தொடரை 4-0 என்ற கணக்கில் வெல்லும் வேகம் கோஹ்லிக்கு வந்து விட்டது.

வெஸ்ட் இண்டீஸை வெள்ளை அடிப்போம்.. இதுதான் கோஹ்லி தற்போது உற்சாகத்துடன் கூறும் வாசகம். இதுகுறித்து போட்டிக்குப் பின்னர் கோஹ்லி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

அடுத்த 3 போட்டிகளும் முக்கியம்

அடுத்த 3 போட்டிகளும் முக்கியம்

இந்த வெற்றியோடு நாங்கள் தேங்கி விட மாட்டோம். அடுத்து 3 போட்டிகள் உள்ளன. அதில் கவனம் செலுத்துவோம். அந்தப் போட்டிகளும் முக்கியமானவை.

ஒவ்வொரு போட்டியும் புதுசு

ஒவ்வொரு போட்டியும் புதுசு

ஒவ்வொரு போட்டியையும் புதிதாக பாவித்து அணுகுவோம். முதல் போட்டியில் என்ன நடந்திருந்தாலும் கவலைப்படாமல், அடுத்த போட்டி குறித்து திட்டமிடுவோம். அப்போதுதான் வெல்ல முடியும்.

வெள்ளை அடிப்போம்

வெள்ளை அடிப்போம்

ஒவ்வொரு போட்டியாக வென்று வருவோம். கடைசியில் 4-0 என்ற கணக்கில் தொடரை வெல்வதே எங்களது லட்சியம். வாய்ப்பிருந்தால் அதை சாதிப்போம். சோர்ந்து போயிருக்க விரும்ப மாட்டோம்.

அடுத்த போட்டியிலும் வென்றால்

அடுத்த போட்டியிலும் வென்றால்

அடுத்த போட்டியிலும் வென்றால் அதற்கடுத்த போட்டிகளை டிரா செய்ய முயற்சிப்போம் என்று யாரும் கருத வேண்டாம். தொடர்ந்து வெற்றியைக் குறி வைத்து ஆடுவோம். வெற்றி பெறுவது நல்ல விஷயம். அதை எட்ட முயற்சிப்போம்.

எங்க விளையாடினாலும் ஜெயிக்கனும்

எங்க விளையாடினாலும் ஜெயிக்கனும்

டெஸ்ட் போட்டியில் வெல்வது நமக்குப் புதிதில்லை. அங்கு விளையாடும்போது ஜெயிக்கிறோம் என்றால் எங்கு விளையாடினாலும் ஜெயிக்க வேண்டும் என்றார் கோஹ்லி.

ஜமைக்காவில் அடுத்த போட்டி

ஜமைக்காவில் அடுத்த போட்டி

இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்கால் அடுத்து ஜூலை 30ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.

Story first published: Monday, July 25, 2016, 11:59 [IST]
Other articles published on Jul 25, 2016
English summary
After inflicting an innings and 92-run defeat on West Indies, Indian captain Virat Kohli is focused on continuing the "winning habit" and wants to complete a 4-0 whitewash.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+