Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாடி நான் அடிக்கிறேன்.. நீங்க கேட்ச் பிடிங்க... சச்சின் என்ன செய்றார்னு செத்த வந்து பாருங்க!!!

டெல்லி: சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இருந்தாலும் அவரை விட்டு கிரிக்கெட் போகவில்லை போலும்.. தன்னை விட்டு கிரிக்கெட் உணர்வுகள் இன்னும் போகாமல் அப்படியே இருப்பதாக கூறியுள்ளார் சச்சின்.

இப்போதெல்லாம் தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடி பொழுதைக் கழித்து வருவதாகவும் சச்சின் கூறுகிறார்.

மகனுடன் விளையாடுவது செம வேடிக்கையாக இருப்பதாகவும் சச்சின் சந்தோஷத்துடன் கூறியுள்ளார். சச்சின் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.. அதிலிருந்து சில...

இன்னும் என்னை பாதிக்கவி்ல்லை

இன்னும் என்னை பாதிக்கவி்ல்லை

நான் இனிமேல் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்ற உணர்வு என்னை இன்னும் தாக்கவில்லை.

உணர்வுகள் அப்படியேதான் இருக்கின்றன

உணர்வுகள் அப்படியேதான் இருக்கின்றன

எனக்குள் கிரிக்கெட் உணர்வுகள் இன்னும் அப்படியேதான் உள்ளது. அது என்னை விட்டு இன்னும் போகவில்லை.

மகனே துணை

மகனே துணை

இப்போது எனது மகனுடன் கிரிக்கெட் ஆடுகிறேன். நல்ல வேடிக்கையாக உள்ளது.

அதெல்லாம் ஒரு காலம்

அதெல்லாம் ஒரு காலம்

கடந்த மாதத்திற்கு முன்பு வரை நான் மிகவும் பிசியாக இருந்தேன். என்னைச் சுற்றி நிறைய நடந்து கொண்டிருக்கும்.

இப்ப நான் ரொம்ப ப்ரீ

இப்ப நான் ரொம்ப ப்ரீ

ஆனால் இப்போது எல்லாமே இலகுவாகி விட்டது. எனது குடும்பத்தினருடன் நிறைய நேரம் இருக்க முடிகிறது. அதற்காகத்தான் காத்திருந்தேன். இப்போதுதான் அது கிடைத்துள்ளது.

டிவியில் கிரிக்கெட் பார்ப்பேன்

டிவியில் கிரிக்கெட் பார்ப்பேன்

டிவியில் கிரிக்கெட் பார்ப்பேன். அது நல்ல பொழுது போக்காக உள்ளது. எனது மகனும் ஒரு கிரிக்கெட் வீரர். எனவே என்னை விட்டு கிரிக்கெட் எங்கும் போகவில்லை என்றே கருதுகிறேன்.

ரஜினி ... சூப்பர்

ரஜினி ... சூப்பர்

என்டிடிவி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்தது அருமையான அனுபவம். என்ன ஒரு அபாரமான மனிதர் அவர். தென்னிந்தியாவிலிருந்து நிறைய வீரர்கள் வந்துள்ளனர். அனைவருமே அவரது ரசிகர்களாக உள்ளனர். நானும்தான்.

முன்னாடியே பார்க்காமல் விட்டு விட்டேனே...

முன்னாடியே பார்க்காமல் விட்டு விட்டேனே...

நான் ரஜினி சாரை முன்பே சந்திக்காமல் விட்டு விட்டேன். இது சற்று வருத்தமாக இருக்கிறது. அற்புதமான மனிதர் அவர். அவருடன் நடந்த சந்திப்பு மிகவும் சந்தோஷமானது என்றார் சச்சின்.

Story first published: Tuesday, December 17, 2013, 13:56 [IST]
Other articles published on Dec 17, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+