Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலின்னா சாதனை... அடுத்தடுத்து சச்சினோட சாதனையை முறியடிக்கும் கேப்டன்!

சிட்னி : முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை மீண்டும் முறியடித்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

ஆஸ்திரேலியாவில் 3000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை சச்சினுக்கு கிடைத்த நிலையில் அவரை தொடர்ந்து விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள இரண்டாவது இந்திய வீரர் மற்றும் 6வது சர்வதேச வீரர் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைத்துள்ளது.

12 ஆயிரம் ரன்கள் சாதனை

12 ஆயிரம் ரன்கள் சாதனை

குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்கள் சாதனையை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்றுவரும் தற்போதைய தொடர்களில் பூர்த்தி செய்தார் கேப்டன் விராட் கோலி. சச்சினின் முந்தைய சாதனை இதன்மூலம் கோலியால் முறியடிக்கப்பட்டது.

சச்சின் ரெக்கார்டை முறியடித்த கோலி

சச்சின் ரெக்கார்டை முறியடித்த கோலி

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் 3000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனை தற்போது விராட் கோலியால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தடுத்து சச்சினின் சாதனையை முறியடித்து கவனம் பெற்றுள்ளார் விராட் கோலி.

3000 ரன்களை கடந்த கோலி

3000 ரன்களை கடந்த கோலி

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3300 ரன்களை தன்னுடைய கேரியரில் பூர்த்தி செய்துள்ளார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில் தற்போது விராட் கோலி அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 3052 ரன்களை கடந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 1,274 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1,327 ரன்கள் மற்றும் டி20 போட்டிகளில் 451 ரன்களை அடித்துள்ளார் விராட் கோலி.

95 போட்டிகள்... 4,529 ரன்கள்

95 போட்டிகள்... 4,529 ரன்கள்

இந்த சாதனையை சர்வதேச அளவில் நிகழ்த்தியுள்ள 6வது வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. விவியன் ரிச்சர்ட்ஸ், தேஷ்மாண்ட் ஹேனஸ், டேவிட் கோவர், பிரையன் லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முன்னதாக இதை சாதித்துள்ளனர். விவியன் ரிச்சர்ட்ஸ் 95 போட்டிகளை விளையாடி, 4,529 ரன்களை ஆஸ்திரேலிய மண்ணில் குவித்துள்ளார்.

Story first published: Wednesday, December 9, 2020, 13:36 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+