For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலைகீழாக மாறிய ஆட்டம்.. ஷர்துல் அதிரடியால் கம்பேக் கொடுத்த கேகேஆர்.. ஆர்சிபிக்கு 205 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேகேஆர் அணியின் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாகூர் 29 பந்துகளில் 68 ரன்கள் விளாசி, மூழ்கிக் கொண்டிருந்த கொல்கத்தா அணியை நிமிர வைத்துள்ளார்.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து கொல்கத்தா அணி சார்பாக குர்பாஸ் - வெங்கடேஷ் ஐயர் கூட்டணி களமிறங்கியது.

After Shardul Thakur Stunning Fifty, KKR Sets a Target of 205 runs for RCB in IPL 2023

சிராஜ் பந்தை குர்பாஸ் வெளுத்து வாங்க, மறுபக்கம் வெங்கடேஷ் ஐயர் நிதானமாக ஆடினார். இதனைத் தொடர்ந்து அட்டாக்கில் வந்த டேவிட் வில்லி, வெங்கடேஷ் ஐயரை 7 ரன்களிலும், மன்தீப் சிங்கை டல் அவுட்டிலும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து அணியை மீட்க வந்த நிதிஷ் ராணாவும், பிரேஸ்வெல் பந்தில் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி சிக்கலில் சிக்கி கொண்டது. இதனிடையே மறுபக்கம் சிறப்பாக ஆடிய குர்பாஸ் 38 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆனால் கரண் சர்மா பந்தில் 57 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரஸ்ஸல் அடுத்த பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் கொல்கத்தா அணி 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் ஷர்துல் தாகூர் களமிறங்கி, அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 20 பந்துகளில் ஷர்துல் தாகூர் அரைசதம் விளாசினார். அதன் பின்னர் அவரின் அதிரடி அடுத்த கியருக்கு மாறியது.

இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் 18 ஓவர்கள் முடிவில் 175 ரன்களை எட்டியது. தொடர்ந்து ஹர்சல் படேல் வீசிய 19வது ஓவரில் ரிங்கு சிங்கும் வெளுக்க, இந்த கூட்டணியின் பார்ட்னர்ஷிப் 48 பந்துகளில் 100 ரன்களை கடந்தது. பின்னர் அந்த ஓவரின் கடைசி பந்தில் ரிங்கு சிங் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கடைசி ஓவரில் ஷர்துல் தாகூர் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

Story first published: Thursday, April 6, 2023, 21:30 [IST]
Other articles published on Apr 6, 2023
English summary
KKR vs RCB: KKR Sets Target of 205 runs for RCB in IPL 2023. KKR's all-rounder Shardul Thakur scored 68 runs off 29 balls in this Match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+