Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WI vs IND: ”இந்தப் பயல போய் பெஞ்ச் பண்ணிட்டீங்களே டா” அஸ்வினுக்கு ஆதரவாக தெறிக்கும் மீம்ஸ்!

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், ரசிகர்கள் உருவாக்கியுள்ள தரமான மீம்ஸை பார்க்கலாம்.

After the fantastic display of cricket on Day 1, Fans created wonderful Memes by appreciating Indian Players

கடந்த 21 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியடைந்ததில்லை. இது போட்டி தொடங்குவதற்கு முன்பாக ரசிகர்களிடையே விவாதமாகியது. இதனை வைத்து வடிவேலுவை சானபிடிக்க கூட்டி சென்று, மலையை சானபிடிக்க வேண்டும் என்று சொல்லும் சிங்கமுத்துவை வைத்து, "அந்த ரெக்கார்டு அப்படியே இருக்கனும்.. இல்லனா வச்சுக்கோ" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

After the fantastic display of cricket on Day 1, Fans created wonderful Memes by appreciating Indian Players

ஷிவ்நரைன் சந்தர்பாலின் மகன் தேஜ்நரைன் சந்தர்பால் 12 ரன்களில் அஸ்வின் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் தந்தை, மகனை விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதனை ரெண்டு படத்தில் குரங்கிடம் கடி வாங்கிய வடிவேலு, மயில்சாமியை பார்த்து, "கிளாமர் அப்பீல்.. சேம் அப்பீல்" என்பார். அதேபோல் தந்தை ஷிவ்நரைன் சந்தபாலும், தேஜ்நரைன் சந்தர்பாலும் பேசுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

After the fantastic display of cricket on Day 1, Fans created wonderful Memes by appreciating Indian Players

வெஸ்ட் அணி வீரர்கள் அஸ்வின் சுழலில் 150 ரன்களில் சுருண்டனர். நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை பார்த்த ரசிகர்கள், பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு, சார்லியை அடித்ததற்காக "இந்தப் பயலே போய் அடிச்சுட்டீங்களே டா" என்று ஒரு வசனம் பேசுவார். அதனை மாற்றி இந்திய ரசிகர்கள் அஸ்வினை வைத்து, "இந்தப் பயல போல் WTC Finalல பெஞ்ச் பண்ணீட்டிங்களே டா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மனக்குமுறல்.

After the fantastic display of cricket on Day 1, Fans created wonderful Memes by appreciating Indian Players

ஜடேஜா வீசிய பந்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளாக்வுட் மிட் ஆனில் தூக்கி அடிப்பார். அதனை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் தாவிச் சென்று ஒற்றைக் கையில் கேட்சை பிடித்து அசத்தினார். இதனை யூட்யூபர் இர்ஃபான் ஒரு வீடியோவில், "பறக்குறோம்.. பறக்குறோம்.. பறந்து ஆகுறோம்" என்று சொல்லுவார். அதனை மாற்றி, சிராஜ் சொல்வதாக "பறக்குறோம்.. பறந்தே ஆகுறோம்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

After the fantastic display of cricket on Day 1, Fans created wonderful Memes by appreciating Indian Players

அதே கேட்சை வைத்து, போக்கிரி படத்தில் விஜய், "எத்தனை ரஜினி படம் பார்த்துருக்கோம்" என்று சொல்லுவார். அதனை மாற்றி, "எத்தனை கிங் கோலி கேட்ச் பார்த்துருப்போம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்.

Story first published: Thursday, July 13, 2023, 8:23 [IST]
Other articles published on Jul 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+