Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

க்ளிக்கான ரித்திகா மேஜிக்... முதல் டெஸ்டில் அதிரடி... இணையத்தில் வைரலாகும் ரோஹித்தின் புகைப்படம்

சென்னை: முதல் டெஸ்டில் சதமடித்த பிறகு ரோகித் சர்மா தனது மனைவி குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அதிரடி சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் போட்டியில் அவரின் 7வது சதமாகும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் வந்த வேகத்தில் திரும்பிய நிலையில் ரோகித் சர்மா அதிரடி காட்டி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

 சதம்

சதம்

சென்னை ஆடுகளத்தில் ஆரம்பம் முதலே பந்தில் நல்ல ஸ்விங் இருந்ததால் வீரர்கள் அடுத்தடுத்து சரிந்தனர். ஆனால் மறுமுனையில் ரோகித் மட்டும் நிலையாக நின்று அதிரடி சதமடித்தார். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிஸ்கியான ஸ்வீப் ஷாட்கள் அடித்து வியக்கவைத்தார்.

மேஜிக்

மேஜிக்

ஒவ்வொரு முக்கியமான நாட்களில் ரோகித் தன் மனைவி ரித்திகாவுக்கு கிஃப்ட் தர மறப்பதில்லை. ரித்திகாவின் வருகையின் போதெல்லாம் ரோகித் அதிரடி காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரோகித்தின் சர்ப்ரைஸ்

ரோகித்தின் சர்ப்ரைஸ்

2017ல் திருமண நாளன்று இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம். 2017ல் ரித்திகா பிறந்த நாளுக்காக இலங்கையுடன் ஒரு நாள் போட்டியில் 118, 2018ல் காதலர் தினத்தன்று தென்னாப்பிரிக்காவுடன் ஒரு நாள் போட்டியில் 115 ரன்கள், தற்போது காதல் தினத்திற்காக இங்கிலாந்துடன் டெஸ்டில் 161 ரன்கள்.

போட்டோ

போட்டோ

சதத்திற்கு பிறகு ரோகித் சர்மா தனது மனைவி, குழந்தையுடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தளர்ந்த விரல்களை மகள் சமைரா சரிசெய்கிறாள் எனக்குறிப்பிட்டுள்ளார். இதனை தற்போது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Sunday, February 14, 2021, 13:49 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+