Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஜடேஜா போட்ட இரண்டே ட்வீட்” விராட் கோலி பிரச்சினை முதல் ஓய்வு பிரச்சினை வரை எல்லாமே க்ளோஸ்.. விவரம்

மும்பை: இந்திய கிரிக்கெட்டில் பரபரப்பு நிலவி வரும் சூழலில் ரவீந்திர ஜடேஜா போட்டுள்ள ட்வீட் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Highlights From Kohli’s Press Meet Ahead Of SA Tour | OneIndia Tamil

50 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி மாற்றப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

விராட் கோலிக்கு ரோகித் சர்மாவுடன் தான் மனக்கசப்பு என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பிசிசிஐயுடன் தான் என ட்விஸ்ட் ஏற்பட்டது.

விராட் கோலி சொன்ன கருத்துகள்

விராட் கோலி சொன்ன கருத்துகள்

நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த விராட் கோலி, தனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்தவித மனக்கசப்புகளும் இல்லை என்றும் இதனை கடந்த இரண்டரை வருடமாக தொடர்ந்து கூறிக்கொண்டே தான் இருப்பதாக தெரிவித்தார். மேலும் பிசிசிஐ சார்பில் என்னிடம் யாருமே பதவி விலக வேண்டாம் என்று கோரவில்லை எனவும் வெளிப்படையாக கூறினார். இதனால் கங்குலி கூறிய கருத்துக்கள் பொய்யா?, உண்மையில் பிரச்சினை யாருக்கு தான் என பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

தலையிட்ட ஜடேஜா

தலையிட்ட ஜடேஜா

இந்நிலையில் தான் தற்போது ரவீந்திர ஜடேஜா போட்டுள்ள ட்வீட்கள் ஒன்று புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது. முதல் ட்வீட்டில் அவர், " போலியான நண்பர்கள் தான் வதந்திகளை நம்புவார்கள், உண்மையான நண்பர்கள் உன்னை தான் நம்புவார்கள்" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி இடையே எந்தவித பிரச்சினை இல்லை என்பதை ஒரு அணி வீரராக ஜடேஜா தெரிவித்திருப்பதாக தெரிகிறது.

திடீர் குழப்பம்

திடீர் குழப்பம்

ஆனால் மற்றொரு ட்வீட்டின் மூலம் தனது சொந்த பிரச்சினைக்காக தான் கருத்து தெரிவித்துள்ளாரா என்று குழப்பம் எழுந்துள்ளது. அதாவது நியூசிலாந்து தொடரின் போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திலும் இடம்பெறவில்லை. அவரின் காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால் இனி டெஸ்ட் போன்ற நீண்ட தொடர்களில் விளையாடாமல் ஓய்வு பெற போவதாக தகவல் வெளியானது.

இரண்டாவது ட்வீட்

இரண்டாவது ட்வீட்

இந்த தகவல்கள் உண்மை இல்லை என்பதை தெளிவுப்படுத்த முடிவெடுத்த ஜடேஜா, தான் டெஸ்ட் அணி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஓய்வு பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும் முதல் ட்வீட்டில் கோலி பிரச்சினையை குறிப்பிட்டாரா அல்லது சொந்த பிரச்சினையை குறிப்பிட்டாரா என்று கேள்விகள் உலா வருகின்றன.

Story first published: Thursday, December 16, 2021, 13:46 [IST]
Other articles published on Dec 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+