உலக கோப்பையில் அந்த டீம் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணீட்டாங்க.. மனதார பாராட்டிய மாஸ்டர் பிளாஸ்டர்
எட்ஜ்பாஸ்டன்: நடப்பு உலக கோப்பையில் வங்கதேசம் தான் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறது என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
உலக கோப்பை தொடரின் 40வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்டாசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக ரோகித் சர்மா 104 ரன்கள், ராகுல் 77 ரன்கள் குவித்தனர்.

அரையிறுதிக்கு முன்னேற்றம்
பிறகு 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேசம் 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை மட்டுமே எடுத்தது. 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா, அரையிறுதிக்கு முன்னேறியது.

பாராட்டு
இந்நிலையில், வங்கதேச அணியையும், அந்த அணியின் போராட்ட குணத்தையும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மனதார பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

போட்டிகளில் சிறப்பு
நடப்பு உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி சிறப்பாக விளையாடி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமல்ல. அவர்கள் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

தொடரின் சிறந்த அணி
இன்னும் சொல்லப்போனால், நான் பார்த்ததில்லையே வங்கதேச அணி இந்த தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறது. அவர்கள் எந்த அணியையும் எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இறுதிவரை போராடுகின்றனர். அவர்களின் இந்தப் போராட்ட குணம், மிகவும் பிடித்திருக்கிறது. அந்த அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.


Click it and Unblock the Notifications