Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அணிக்காக வீரர்களை தேர்வு செய்யும்போது வயசை பார்க்கக்கூடாது.. திறமையைதான் பார்க்கணும்...

டெல்லி : சாலை பாதுகாப்பு உலக தொடரின் இந்திய அணிக்காக சிறப்பான பேட்டிங்கை அளித்து வருகிறார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய அணிக்காக விரர்களை தேர்வு செய்யும்போது வயதை பார்க்காமல் அவர்களின் திறமையை பார்த்து தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நீண்ட காலங்களுக்கு பிறகு மீண்டும் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது கடினமானது என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் களத்தில் சச்சின்

மீண்டும் களத்தில் சச்சின்

இந்திய ஜாம்பவான்கள் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், நீண்ட காலங்களுக்கு பிறகு இந்திய அணிக்காக தற்போது சாலை பாதுகாப்பு உலக தொடருக்காக விளையாடி வருகிறார். லீக் சுற்றில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 37 பந்துகளில் 60 ரன்களும் அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 65 ரன்களும் எடுத்துள்ளார்.

உடல் ஒத்துழைக்காது

உடல் ஒத்துழைக்காது

இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு மீண்டும் விளையாடும்போது உடல் ஒத்துழைக்காது என்று அவர் கூறியுள்ளார். பயிற்சி ஆட்டத்தின்போது முதுகில் காயம் ஏற்பட்டு 10 நாட்கள் தான் ஓய்வு எடுத்ததாகவும் பிறகு மெதுவாக இயல்புக்கு திரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார். ஆயினும் சிறப்பான ஒரு விஷயத்திற்காக விளையாடியது பெருமை தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொறுமை அவசியம்

பொறுமை அவசியம்

சாலைகளில் பயணம் செய்யும்போது பொதுமக்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்றும் சச்சின் அறிவுறுத்தியுள்ளார். மிகவும் கடுமையாக இருசக்கர வாகனங்களையோ அல்லது காரையோ ஓட்டக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த தொடருக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திறமை முக்கியம்

திறமை முக்கியம்

மேலும் இந்திய அணியில் இளைஞர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பதைவிட திறமையான வீரர்களை தேர்ந்தெடுப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். வீரர்கள் தேர்வில் வயதை கவனத்தில் கொள்ளாமல் திறமையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.

Story first published: Friday, March 19, 2021, 17:19 [IST]
Other articles published on Mar 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+