Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final: இந்தியாவுக்கு எதிராக 65.05 பேட்டிங் சராசரியா.. பொளந்துகட்ட காத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித்!

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்து மண்ணில் 59.55 சராசரியும், இந்திய அணிக்கு எதிராக 65.05 சராசரியும் வைத்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 7ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின் இங்கிலாந்துக்கு சென்ற நிலையில், ஆஸ்திரேலிய அணியினர் பலரும் 2 மாதங்களாக இங்கிலாந்தில் உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட சில வீரர்கள் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார்.

Ahead of WTC Final, Australian Player Steve Smith have 65.05 batting average against India

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரோடு, ஆஷஸ் தொடரும் வருவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் அதற்கேற்ப தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் அபாரமான ஃபார்மில் உள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆஷஸ் தொடரிலேயே ஒற்றை ஆளாக இங்கிலாந்து அணியை ஒரு வழி செய்துவிட்டார் என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து மண்ணில் ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் சராசரி 59.55ஆக உள்ளது.

அதேபோல் இந்திய அணிக்கு எதிராக 65.05 பேட்டிங் சராசரி வைத்துள்ளார். இப்படியான சூழலில், ஆஸ்திரேலியா ஆடுகளத்தை போன்ற உள்ள ஓவல் மைதானத்தில் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கவுள்ளது இந்திய ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்திய அணியின் பும்ரா இல்லாததும் ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் மொத்த பொறுப்பும் முகமது ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரின் கைகளிலேயே உள்ளது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் இந்திய வீரர் அஸ்வினிடம் மட்டும் 6 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டமிழந்துள்ளார். இதனால் ஸ்டீவ் ஸ்மித்தை சமாளிக்க அஸ்வினை இந்திய அணி ஆயுதமாக பயன்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல் இந்திய வீரர் ஜடேஜாவும் 7 முறை ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் எந்த சுழற்பந்துவீச்சாளருடன் இந்திய அணி களமிறங்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Story first published: Saturday, June 3, 2023, 10:01 [IST]
Other articles published on Jun 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+