Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 மிக முக்கிய காரணங்களுக்காக.. பாண்ட்யா சகோதரர்களை வாங்க அடம்பிடிக்கும் புதிய அணி.. நிறைவேறுமா?

சென்னை: 3 முக்கிய காரணங்களுக்காக பாண்ட்யா சகோதரர்களை ஏலம் எடுக்க அகமதாபாத் அணி தீவிரமாக முயன்று வருகிறது.

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் குறித்த பேச்சுக்கள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்த முறை 2 புதிய அணிகளும் வருவதால் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

ஏனென்றால் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என பிசிசிஐ அறிவித்துவிட்டது. இதனால் யாரை தேர்ந்தெடுப்பது என அணிகள் குழம்பியுள்ளன.

மும்பை அணி திட்டம்

மும்பை அணி திட்டம்

அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணி முதன்மை தேர்வாக கேப்டன் ரோகித் சர்மாவை வைத்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக இளம் வீரர் இஷான் கிஷான், கெயீரன் பொல்லார்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தக்கவைக்கவுள்ளது.

பாண்ட்யா சகோதரர்கள்

பாண்ட்யா சகோதரர்கள்

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிகாக பல போட்டிகளை வென்றுக்கொடுத்த பாண்ட்யா சகோதரர்கள் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கழட்டிவிடப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகியோருக்கு முதன்முறையாக வாய்ப்பு வழங்கியது மும்பை அணி தான். அதன்பிறகு அவர்களின் வாழ்கை முறையே மாறிவிட்டது. இப்படிபட்ட இடத்தை விட்டு அவர்கள் வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் 3 முக்கிய காரணங்களால் புதிதாக வந்துள்ள அகமதாபாத் அணி பாண்ட்யா சகோதரர்களை ஏலம் எடுக்கவுள்ளது.

அதிக அனுபவம்

அதிக அனுபவம்

முன்னணி ஆல்ரவுண்டர்களான ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகியோர் ஐபிஎல் தொடரில் நிறைய அனுபவம் உள்ளனர். மும்பை அணிக்காக அனைத்து இக்கட்டான சூழல்களிலும் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். எனவே இப்படிபட்டவர்களை அணியில் வைத்துக்கொள்ளவே புதிதாக வரும் அணி விரும்பும். இதே போல சாம்பியன் அணியான மும்பையை சமாளிக்க வேண்டும் என்றால் அதனை நன்கு புரிந்து வைத்துள்ள பாண்ட்யா தேவை. இதே போல சிஎஸ்கேவை பற்றியும் பாண்ட்யாவுக்கு நன்றாக தெரிவது கூடுதல் பலம்.

சொந்த ஊர்

சொந்த ஊர்

பாண்ட்யா சகோதரர்களின் சொந்த ஊர் குஜராத் ஆகும். ஆனால் அவர்கள் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஒருமுறை குஜராத் லையன்ஸ் அணி உருவாக்கப்பட்ட போதும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது அகமதாபாத் அணி வந்திருப்பதால், சொந்த ஊருக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள். இதுமட்டுமின்றி அந்த ஊரின் வீரர்களை வைத்துக்கொண்டால் ரசிகர்கள் மத்தியில் அணிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் நிச்சயம் அகமதாபாத் அணி அவர்களை ஏலத்தில் எடுக்கும்.

Story first published: Friday, November 26, 2021, 16:42 [IST]
Other articles published on Nov 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+