பேட்ஸ்மேனுக்கு இப்படிலாமா காயம் வரும்? நான் கேள்வி பட்டதே இல்ல..ஸ்ரேயாஸ் குறித்து அஜய் ஜடேஜா கருத்து
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக உருவெடுத்து வருபவர் ஸ்ரேயாஸ் ஐயர். 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.
அடுத்த கேப்டன் என்ற அளவுக்கு ஸ்ரேயாஸ் ஐயரை ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் தொடர்ந்து வித்தியாசம் வித்தியாசமான காயம் ஏற்படுவதால் அவரால் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

3 மாதம்
இது குறித்து பேசிய டிராவிட் ஸ்ரேயாஸ், இந்திய அணையில் மிகவும் முக்கியமான வீரராக திகழ்வதாக பாராட்டினார். இதனால் காயத்தில் இருந்து குணமடைந்து வந்த உடனே ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று டிராவிட் கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் முதுகில் வலி ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மூன்று மாதத்திற்கு ஸ்ரேயாஸ் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

சந்தேகம்
இதனால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்படும் என்பதால் அதனை வேண்டாம் என்று ஸ்ரேயாஸ் ஐயர் முடிவு எடுத்திருக்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, ஸ்ரேயாஸ்க்கு காயம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார்.

இதுவே முதல் முறை
இது குறித்து பேசிய அவர் மூன்று மாதங்கள் ஒரு பேட்ஸ்மேன் முதுகில் காயம் ஏற்பட்டதற்காக விளையாட முடியாமல் போனது இதுதான் முதல் முறை. ஒரு வீரனுக்கு காயம் ஏற்படும் ஆனால் முதுகில் பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்படுவதை நான் இப்போதுதான் கேள்வி பெறுகிறேன்.பேட்ஸ்மேன்களுக்கெல்லாம் இது நடைபெறுகிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கிரிக்கெட் போட்டியை சுற்றி நடைபெறும் விஷயங்கள் தான்.

எடை தூக்குகிறார்கள்
வீரர்கள் தங்களது உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எடையை தூக்குகிறேன் என்று அதிகமாக தூக்கி இது போன்ற காயத்தை வீரர்கள் அடைந்து விடுகிறார்கள். ஸ்ரேயாஸ் விரைவில் குணமாக வேண்டும் என நான் வாழ்த்துகிறேன் என அஜய் ஜடேஜா கூறியுள்ளார். வேக பந்துவீச்சாளர்களுக்கு தான் முதுகில் காயம் ஏற்படும். ஆனால் ஸ்ரேயாஸ் வெறும் பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு இந்த காயம் ஏற்பட்டு இருப்பது பல சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications