For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த 5 வீரர்கள்தான் இந்தியாவுக்கு 2025 ஆசியக் கோப்பை ஜெயிச்சு கொடுப்பார்கள்.. ரஹானே போட்ட லிஸ்ட்

துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடர் துவங்க உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் துணை கேப்டனும், அனுபவ வீரருமான அஜிங்க்யா ரஹானே, இந்தத் தொடரில் இந்திய அணியின் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஐந்து முக்கிய வீரர்களைத் தேர்வு செய்து, அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.

தனது யூடியூப் காணொளி மூலம் அவர் பகிர்ந்துகொண்ட இந்தப் பட்டியலில், ஒரு பேட்ஸ்மேன், இரண்டு ஆல்-ரவுண்டர்கள், மற்றும் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் என ஐந்து வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இவர்களே இந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருப்பார்கள் என அவர் சுட்டிக் காட்டினார்.

Ajinkya Rahane Names 5 Key Players for India s Asia Cup 2025 Success

அச்சமற்ற கேப்டன் சூர்யகுமார் யாதவ்

அஜிங்க்யா ரஹானே தனது பட்டியலில் முதலிடம் கொடுத்திருப்பது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்குத்தான். டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரின் அச்சமற்ற அணுகுமுறை, அவரை மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேனாக மாற்றுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

"சூர்யகுமார் இந்த வடிவத்தில் எவ்வளவு அபாயகரமானவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் இதுவரை சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். ஆனால், சமீபத்திய அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் எப்படி பேட்டிங் செய்யப் போகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.:

"ஒரு கேப்டனாக, அவர் அற்புதமாகச் செயல்படுகிறார். களத்தில் சுறுசுறுப்பாகவும், அணியை சிறப்பாகவும் வழிநடத்துகிறார். இந்த ஆசியக் கோப்பையில் அவரது பேட்டிங் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நான் உணர்கிறேன்" என்று ரஹானே கூறினார்.

சமநிலைக்கு ஹர்திக் பாண்டியா

அடுத்ததாக, அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா குறித்து ரஹானே வலியுறுத்திப் பேசினார். மிடில் ஆர்டரில் அதிரடியாக ரன் குவிப்பவராகவும், தேவையான நேரத்தில் பந்துவீசுபவராகவும் ஹர்திக்கின் பங்கு அணிக்கு மிகவும் அவசியம் என்றார்.

"இந்த ஆசியக் கோப்பையில் ஹர்திக்கின் பங்கு மிக முக்கியமானது. ஒரு ஆல்-ரவுண்டராக, கடந்த காலங்களில் அணிக்குச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். 5 அல்லது 6-வது இடத்தில் களமிறங்கி, அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி, ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விளையாடும் திறமை அவரிடம் உள்ளது. அவர் மீண்டும் அதைச் செய்வார் என்று நான் நம்புகிறேன். அவர் தொடர்ந்து இரண்டு முதல் நான்கு ஓவர்கள் வரை பந்துவீசினால், அது அணிக்கு ஒரு சரியான சமநிலையை வழங்கும்" என்று ரஹானே குறிப்பிட்டார்.

குறைவாக மதிப்பிடப்பட்ட அக்சர் படேல்

ரஹானே தனது தேர்வில், அக்சர் படேலை இந்திய அணியில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட வீரர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டிய ரஹானே, துபாய் ஆடுகளங்கள் அக்சரின் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்துள்ளார்.

"கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஒரு வீரராக அக்சர் தன்னை மிகவும் மேம்படுத்தியுள்ளார். அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அணிக்குச் சிறப்பாகப் பங்களித்துள்ளார். பவர்பிளே, மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்கள் என ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் பந்துவீசும் திறன் அவருக்கு உள்ளது. ஒரு கேப்டனுக்கு அக்சர் படேல் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சிதான். அவரது ஃபீல்டிங் திறனையும் நாம் மறந்துவிடக் கூடாது. துபாயில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்பதால், அக்சரின் திறமையும் அனுபவமும் அணிக்குக் கை கொடுக்கும்" என்றார் ரஹானே.

அபாயகரமான வேகப்பந்து வீச்சுக் கூட்டணி

வேகப்பந்து வீச்சு பற்றி பேசும்போது, ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்குத் திரும்பியிருப்பது குறித்து ரஹானே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பும்ராவை ஒரு உண்மையான "மேட்ச் வின்னர்" என்று புகழ்ந்த அவர், விக்கெட்டுகளை எடுக்காத நேரத்தில்கூட, ரன்களைக் கட்டுப்படுத்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் திறன் கொண்டவர் என்றார்.

பும்ராவுக்குத் துணையாக, இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை ரஹானே தேர்ந்தெடுத்தார். பும்ராவுடன் அர்ஷ்தீப் இணைந்து பந்துவீசுவதைப் பார்க்க ஆவலாக இருப்பதாகக் கூறிய அவர், "அர்ஷ்தீப்பின் பந்துவீச்சுத் திறமை நம் அனைவருக்கும் தெரியும். அவரால் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்ய முடியும்."

"மேலும், புதிய பந்தில் துல்லியமாக யார்க்கர்களை வீசும் திறன் அவருக்கு உள்ளது. நெருக்கடியான தருணங்களில், ஸ்லோயர் பந்துகள் மற்றும் வைடு யார்க்கர்கள் போன்ற அவரது பந்துவீச்சு வேறுபாடுகள் அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று ரஹானே கூறினார்.

Story first published: Saturday, September 6, 2025, 7:49 [IST]
Other articles published on Sep 6, 2025
English summary
Ajinkya Rahane Names 5 Key Players for India's Asia Cup 2025 Success
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+