Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வு பெற்ற உடன் போன் செய்த 6 இந்திய வீரர்கள்.. மனம் திறந்த அஜின்க்யா ரஹானே.. யார் அவர்கள்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அஜின்கியா ரஹானே, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை சமீபத்தில் அறிவித்தார். அவர் ஓய்வு பெற்றதை அடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க போன் மற்றும் மெசேஜ் செய்த முக்கிய வீரர்கள் குறித்து ரஹானே மனம் திறந்துள்ளார்.

இது குறித்து ரஹானே அளித்த பேட்டியில், "நான் ஓய்வு வீடியோவை வெளியிட்டவுடன் எனக்கு வந்த முதல் போன் கால் சச்சின் டெண்டுல்கருடையது தான். நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன் என்று நினைத்ததாக அவர் கூறினார். ஆனால், நான் எந்தவித வருத்தமும் இன்றி ஓய்வு பெறுகிறேன்; தேவையில்லாமல் எனது ஆட்டத்தை மேலும் கொண்டு செல்ல விரும்பவில்லை என்று அவரிடம் கூறினேன்" என்றார்.

Ajinkya Rahane Reveals First Call After Retirement Came From Sachin Tendulkar Kohli Rohit amp amp Others Texted

சச்சினைத் தொடர்ந்து முன்னாள் வீரர் இர்பான் பதானும் அவருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ரஹானேவுக்கு மெசேஜ் மூலம் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர். ரஹானேவுடன் நீண்ட காலம் ஒன்றாக ஆடிய புஜாராவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவர்கள் அனைவருக்கும், "விளையாட்டிற்கு எனது முழு பங்களிப்பையும் அளித்துவிட்டேன், முழு திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன்" என்று ரஹானே ஒரே மாதிரியான பதிலை அனுப்பியுள்ளார்.

ஓய்வு அறிவிப்பு குறித்து ரஹானே பேசுகையில், "ஓய்வு வீடியோவை பதிவு செய்த பிறகு நான் மிகவும் அழுதேன். எனது குடும்பத்தினருடன் இதைப் பற்றி விவாதிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டேன். இத்தனை வருடங்களாக நான் நேசித்த ஒரு விஷயத்தை இனி செய்ய மாட்டேன் என்ற எண்ணம் என்னை மிகவும் பாதித்தது" என்றார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட் ஆன டாப் 5 கேப்டன்கள்.. இந்திய கேப்டனும் இடம் பெற்றுள்ளார்!

டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட் ஆன டாப் 5 கேப்டன்கள்.. இந்திய கேப்டனும் இடம் பெற்றுள்ளார்!

இந்திய அணியின் டெஸ்ட் பயணம் பற்றி பேசிய அவர், "நானும் புஜாராவும் உள்நாட்டு போட்டிகளில் அதிகம் விளையாடியுள்ளோம். விராட் கோலியுடன் இந்திய அணிக்காக அதிக நேரம் செலவிட்டுள்ளேன். 2015 இல் 6 அல்லது 7 வது இடத்தில் இருந்த இந்திய டெஸ்ட் அணியை, முதலிடத்திற்கு கொண்டு வர நாங்கள் கடுமையாக உழைத்தோம்" என்று பெருமையுடன் கூறினார்.

Story first published: Tuesday, August 11, 2026, 15:11 [IST]
Other articles published on Aug 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+