Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போடு தகிட தகிட.. இந்திய தேர்வுக்குழுவுக்கு வரும் முன்னாள் ஸ்டார் வீரர்.. இனி மாஸான வீரர்கள் ரெடி!

மும்பை: இந்திய தேர்வுக்குழுவுக்கு உறுப்பினர் பதவிக்கு முன்னாள் வீரர் அஜித் அகர்க்கரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி படுமோசமாக தோல்வியடைந்து வெளியேறியதை அடுத்து பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

அணியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வரை மாற்ற வேண்டும் எனவும், புதியவர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என விமர்சனங்கள் எழுந்துக்கொண்டே உள்ளன.

 தேர்வுக்குழு

தேர்வுக்குழு

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்வுக்குழு மீது நடவடிக்கை எடுத்தது பிசிசிஐ நிர்வாகம். சேட்டன் சர்மா தலைமையிலான மொத்த தேர்வுக்குழுவையும் அதிரடியாக நீக்கியது. மேலும் புதிய உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களும் வரும் 28ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் வீரர்

ஸ்டார் வீரர்

இந்நிலையில் தேர்வுக்குழுவுக்கு முன்னாள் நட்சத்திர வீரர் அஜித் அகர்க்கர் களமிறங்கவுள்ளார். தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரின் உதவியில் பல்வேறு வெற்றிகளை டெல்லி அணி பெற்று வருகிறது. அந்த பதவியை ராஜினாமா செய்தால் தான் தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விரைவில் இதுகுறித்து அறிவிப்பார் எனத் தெரிகிறது.

காலி இடங்கள்

காலி இடங்கள்

ஒருவேளை அகர்க்கர் விண்ணப்பித்தால், மேற்கு இந்தியாவிற்கு இருக்கும் ஒரு சீட் நிரம்பிவிடும். தென்னிந்தியாவுக்கு தமிழகம், கேரளா,ஐதராபாத்தில் இருந்து யாரேனும் ஒருவர் விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 5 சீட்களுக்காக அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தகுதிகள்

தகுதிகள்

இந்த பதவிக்கு விண்ணபிப்போர் குறைந்தது 7 டெஸ்ட் போட்டிகள், 30 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். ஓய்வு பெற்று குறைந்தது 5 வருடங்களாவது ஆகியிருக்க வேண்டும். இதே போல இந்தியாவில் வேறு எந்த கிரிக்கெட் கமிட்டியில் உறுப்பினராக இருக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.

Story first published: Saturday, November 19, 2022, 15:26 [IST]
Other articles published on Nov 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+