Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ருதுராஜை இந்திய அணி கேப்டனாக நியமிக்கணும் என போராடிய அஜித் அகர்கர் ஆனால்.. 2023 சம்பவம் அம்பலம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் அகர்கர் வெளியேற உள்ள நிலையில், அவருக்கும் பிசிசிஐ நிர்வாகத்திற்கும் இடையே கடந்த காலங்களில் நடந்த பல ரகசிய மோதல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த மோதல் ரோஹித் சர்மா விவகாரத்தில் மட்டும் தொடங்கவில்லை; 2023-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் போது இந்த சர்ச்சை வெடித்தது. அந்த தொடருக்கு பும்ரா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அப்போது இது குறித்து அகர்கர் அதிருப்தியில் இருந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.

Ajit Agarkar Preferred Ruturaj Gaikwad Over Jasprit Bumrah For Captaincy In 2023 Ireland T20Is

அப்போது நீண்ட கால காயத்தில் இருந்து மீண்டு வந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையைக் குறைக்க அகர்கர் விரும்பினார். எனவே, இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை அந்தத் தொடருக்கு கேப்டனாக நியமிக்க அகர்கர் பரிந்துரைத்தார். ருதுராஜ் ஏற்கனவே 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்ததால், அயர்லாந்து தொடர் அவரது கேப்டன்சி எதிர்காலத்திற்கு உதவும் என்று அஜித் அகர்கர் வாதிட்டார்.

ஆனால், பிசிசிஐ நிர்வாகிகள் அகர்கரின் ஆலோசனையை அதிரடியாக நிராகரித்தனர். அணியை வழிநடத்த பும்ரா மிகுந்த ஆர்வமாக இருப்பதாகக் கூறி, அகர்கரின் விருப்பத்திற்கு மாறாக பும்ராவையே கேப்டனாக பிசிசிஐ நியமித்தது. அந்தத் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது.

தேர்வுக் குழு தலைவராக பொறுப்பேற்ற தனது 2-வது தேர்வுக் கூட்டத்திலேயே அகர்கரின் முடிவை பிசிசிஐ புறந்தள்ளியது. தொடர்ந்து இதுபோன்ற நிர்வாகத் தலையீடுகளும், முக்கிய முடிவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளுமே தற்போது அஜித் அகர்கர் பதவி விலக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

சுப்மன் கில் விலகல்? புதிய ஒருநாள் அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்.. நியூசிலாந்து தொடரில் முக்கிய மாற்றம்

சுப்மன் கில் விலகல்? புதிய ஒருநாள் அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்.. நியூசிலாந்து தொடரில் முக்கிய மாற்றம்

சமீபத்தில் ரோஹித் சர்மாவை ஒருநாள் அணியில் இருந்து நீக்க அகர்கர் முடிவு செய்த நிலையில், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா ஊடகங்களில் ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை ஆடுவார் என பேசி இருந்தார். இந்த விவகாரம் காரணமாக அஜித் அகர்கர் பதவி நீட்டிப்பை மறுத்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Monday, September 21, 2026, 6:15 [IST]
Other articles published on Sep 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+