For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியின் தோல்விக்கு இவங்க 2 பேர் தான் காரணம்.. ஒரே தவறை திரும்ப திரும்ப செய்வதா- ஆகாஷ் சோப்ரா

மும்பை : இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இலங்கையிடம் ஒரு நாள் தொடரை இழந்தது.

இந்தத் தொடரில் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே படுமோசமாக இருந்தது. இந்த நிலையில் பேட்டிங்கில் ரோகித் சர்மா மட்டும் அதிகபட்சமாக மூன்று போட்டிகளிலும் சேர்த்து 157 ரன்கள் சேர்த்திருக்கிறாராம்

IND vs SL Virat Kohli Rohit Sharma

இதில் இரண்டு அரை சதம் அடங்கும். ரோஹித் சர்மாவை தவிர மற்ற யாருமே பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, விராட் கோலியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. இலங்கைக்கு எதிரான தொடரில் இந்தியா தோற்றத்துக்கு காரணம் என்ன என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ளவர் விராட் கோலி, 3 போட்டியிலும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எல்பி டபிள்யு முறையில் ஆட்டம் இழந்து இருக்கிறார். கடைசியாக இப்போது விராட் கோலி இதே மாதிரி ஆட்டம் இழந்தது எப்போது என்று என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. அபாயகரமான பந்தை தவறாக எதிர்கொண்டு விராட் கோலி ஆட்டம் இழந்தார்.

அது மட்டுமில்லாமல் மூன்று முறையும் தேவையில்லாமல் ரிவியூ பயன்படுத்தி வீணடித்தார். விராட் கோலி தன்னுடைய ஆதிக்கத்தை இந்த தொடரில் நிலை நிறுத்தவே முடியவில்லை. இதை போன்று ஸ்ரேயாஸ் ஐயர், இந்த தொடரில் மோசமாக விளையாடியது மிகப்பெரிய தாக்கத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தியது.
சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறந்த வீரர் என ஸ்ரேயாஸ் கருதப்படுவார்.

ஆனால் இந்த தொடரில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை அவரால் சரியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்க்க முடியவில்லை. இரண்டு முறை சுழற் பந்துவீச்சாளர் இடமும் ஒருமுறை வேகப்பந்துவீச்சாளர் இடமும் அவர் ஆட்டம் இழந்து இருக்கிறார். நமது வீரர்கள் உண்மையிலேயே சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நன்றாக விளையாடுவார்கள் என்றால், ஏன் இலங்கைத் தொடரில் இப்படி நடந்தது என்று எனக்கு நிச்சயம் தெரியவில்லை என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Saturday, August 10, 2024, 9:02 [IST]
Other articles published on Aug 10, 2024
English summary
Akash chopra slams this 2 cricketers as the reason for india cricket team loss vs srilanka
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+