டெஸ்ட் தரவரிசையில் அனைவரும் நம்பர் 1... ஐசிசியின் ஜாலி விளையாட்டு!
Recommended Video

டெல்லி: ஐசிசி நேற்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் அனைத்து வீரர்களும் நம்பர் 1 இடத்தைப் பிடித்தனர். இது என்னடா குழப்பம் என்று யோசித்தால், இது ஐசிசியின் ஜாலி விளையாட்டு.
ஐசிசி டெஸ்ட், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டிகளுக்கான அணிகள், பவுலிங், பேட்டிங், ஆல்ரவுண்டர் என தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முந்தைய வாரம் நம்பர் 1 இடத்தில் இருந்த விராட் கோஹ்லி, இந்த வாரம் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பிரபல ராப் பாடகர் கானே வெஸ்ட், இது குறித்து ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டார். யாரும் யாரை விடவும் சிறந்தவர்கள் இல்லை என்று அதில் அவர் கூறியிருந்தார்.
உடனடியாக அதற்கு பதிலளிக்கும் வகையில், ஐசிசி புதிய ஜாலி தரவரிசையை வெளியிட்டது, அதில் அனைத்து வீரர்களுக்கும் முதலிடம் தரப்பட்டுள்ளது.
கானே வெஸ்ட் என்ன அவ்வளவு பெரிய ஆளா என்று நீங்கள் கேட்கலாம். அவரே பிரபலம்தான். இதைத் தவிர, அமெரிக்காவின் டிவி பிரபலம் கிம் கர்தாசியானின் புருஷன்தான் இந்த வெஸ்ட். இந்த விளக்கம் போதுமா.


Click it and Unblock the Notifications