நீங்க தொட்டாலே ஹிட்டுதான்... இந்திய துவக்க வீரரை பாராட்டிய பாலிவுட் ஹீரோ
மும்பை : ஐபிஎல் 2020 தொடர் வரும் மாதம் 19ம் தேதி யூஏஇயில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா தன்னுடைய நெட் பயிற்சியை துவக்கியுள்ளார்.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் உள்ளிட்ட வீரர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் நெட் பயிற்சி செய்த ரோகித் சர்மா, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அடுத்த 19ம் தேதி துவக்கம்
ஐபிஎல் 2020 தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி யூஏஇயில் துவங்கி 53 நாட்கள் நடைபெறவுள்ளது. இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் 8 ஐபிஎல் அணிகளும் யூஏஇக்கு தங்களது பயணத்தை துவக்கவுள்ளன. முன்னதாக அணியின் வீரர்கள் தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து பயிற்சிகளை துவக்கியுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியீடு
இதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் தனது நெட் பயிற்சியை துவக்கியுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வார்ம் அப், நெட் பயிற்சி உள்ளிட்டவற்றை அவர் செய்கிறார். தொடர்ந்து தன்னிடம் வரும் பந்துகளை அதகளம் செய்கிறார். பின்னணி இசையுடன் சூப்பராக இருக்கிறது அந்த வீடியோ.

ரன்வீர் சிங் பாராட்டு
மும்பை இந்தியன்ஸ் அணியினருடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டதாக அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியிடப்பட்ட ஒரு மணிநேரத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளியது. இந்நிலையில், இந்த வீடியோவையும் அதில் ரோகித் சர்மா மேற்கொள்ளும் பயிற்சியையும் பார்த்து பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங்கும் எல்லா பாராட்டும் ஹிட்மேனுக்கே என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

தோல்விகண்ட மும்பை இந்தியன்ஸ்
கடந்த முறை டைட்டிலை வென்று நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் கடந்த 2014ல் பொது தேர்தலையொட்டி யூஏஇயில் பாதி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் அங்கு நடைபெற்ற 5 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியையே தழுவியது. இந்த நடைமுறையை தற்போது மாற்ற வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் அதன் கேப்டனும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications