Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு போறேன்”.. விலக முடிவு செய்தார் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்

மும்பை: 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் அடுத்தடுத்து பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கேப்டன்சி சர்ச்சை ஒருபுறம் இருக்க, தற்போது அணியின் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசான்ஃபர் அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளரான அல்லா கசான்ஃபர், கடந்த 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். அந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடிய அவர், 15 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார். அவரது பந்துவீச்சில் ஓவருக்கு 10 ரன்கள் என அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும், விக்கெட்டுகளை வீழ்த்துவதில் அவர் சிறந்து விளங்கினார்.

Allah Ghazanfar might leave Mumbai Indians ahead of IPL 2027 due to internal issues

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் நிலவும் கேப்டன்சி குழப்பங்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான அசாதாரண சூழ்நிலை காரணமாக கசான்ஃபர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மும்பை அணியிலிருந்து விலக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அவரை தங்கள் அணியில் இணைக்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தீவிர முயற்சி மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. கடந்த சீசனில் லக்னோ அணி சுழற்பந்து வீச்சில் திக்வேஷ் ரதியை மட்டுமே நம்பி இருந்தது. அவர் 2025 சீசனில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 2026 சீசனில் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதனால் 14 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்த லக்னோ அணி, தனது சுழற்பந்து வீச்சை பலப்படுத்த கஸன்ஃபரை குறிவைத்தது.

"இலங்கையில் பயங்கரமாக திரும்பும்.. நம்ம வீரர்கள்..".. இந்திய அணியின் பலவீனத்தை சொன்ன தீப் தாஸ்குப்தா

லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்களுடன் நல்ல நட்பு இருப்பதால், இந்த ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி டெல்லி அணியில் இருந்து குல்தீப் யாதவை வாங்கியதால், கசான்ஃபர் உடனான பேச்சுவார்த்தையில் தற்போதைக்குத் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவில் கசான்ஃபர் உறுதியாக இருப்பதால், அவர் அடுத்த சீசனில் வேறு புதிய அணியில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Sunday, August 2, 2026, 10:52 [IST]
Other articles published on Aug 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+