Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா, பண்ட், விஹாரி.. மொத்த டீமும் ஹாஸ்பிட்டலில்.. ஆனாலும் விடாமல் போராடும் வீரர்கள்.. ஷாக்கிங்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைவது பெரிய அளவில் அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்ய போராடி வருகிறது. மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தற்போது ஆஸ்திரேலியா ஸ்கோரை எடுக்க முயன்று இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைவது பெரிய அளவில் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த தொடரே மூன்று வீரர்களின் காயத்தோடுதான் தொடங்கியது. இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் ரோஹித் சர்மா காயம் அடைந்து முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரை ஆடவில்லை.

இஷாந்த் சர்மா

இஷாந்த் சர்மா

அதேபோல் இஷாந்த் சர்மா ஐபிஎல் தொடரில் காயம் அடைந்ததால் அவரும் ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகவில்லை. இன்னொரு பக்கம் இந்திய அணியின் இன்னொரு பவுலர் புவனேஷ்வர் குமாரும் காயம் அடைந்தார். இதனால் இவரும் ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வாகவில்லை.

மூத்த பவுலர்

மூத்த பவுலர்

இவர்கள் போக ஆஸ்திரேலிய தொடரின் போதே இந்திய அணியின் மூத்த பவுலர் ஷமி காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் உமேஷ் யாதவும் காயம் அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். இது போக தற்போது நடந்து வரும் போட்டியில் ஜடேஜா காயம் அடைந்துள்ளார். இவர்கள் போக ஆஸ்திரேலிய தொடரின் போதே இந்திய அணியின் மூத்த பவுலர் ஷமி காயம் அடைந்து வெளியேறினார். பின்னர் உமேஷ் யாதவும் காயம் அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். இது போக தற்போது நடந்து வரும் போட்டியில் ஜடேஜா காயம் அடைந்துள்ளார்.

பண்ட் காயம்

பண்ட் காயம்

இவர் அடுத்த போட்டியில் ஆட மாட்டார். இதுபோக ரிஷாப் பண்ட் காயம் அடைந்துள்ளார். ஆனால் இவர் அடுத்த போட்டியில் ஆட வாய்ப்புள்ளது. இதுபோக மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய ராகுல் காயம் அடைந்து தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். இவர்கள் வரிசையாக காயம் அடைய இன்று விஹாரியும் காயம் அடைந்துள்ளார்.

விஹாரி

விஹாரி

விஹாரியும் இன்று காலில் காயம் அடைந்துள்ளார். இந்திய அணியில் ஏற்கனவே கோலி இல்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் முக்கியமான வீரர்கள் எல்லோரும் காயம் அடைந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்ய போராடி வருகிறது. அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி யாரை தேர்வு செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Monday, January 11, 2021, 10:19 [IST]
Other articles published on Jan 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+