For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரப்பத்தியும் கவலைப்படல... எல்லார்கூடவும் சேர்ந்து டான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தாரு...

புதுடெல்லி : 28 ஆண்டுகள் தவத்திற்கு பிறகு கடந்த 2011ல் தோனி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.

Recommended Video

Sachin danced after 2011 World Cup win : Harbhajan Singh

இந்திய ரசிகர்களின் கொண்டாட்டமான இந்த தருணத்தில், சச்சின் டெண்டுல்கர் யாரைப்பற்றியும் கவலைப்படாமல், எல்லோருடனும் சேர்ந்து டான்ஸ் செய்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

இந்த சந்தோஷமான தருணத்தை பகிர்ந்து கொண்ட ஹர்பஜன் சிங், தானும் தன்னுடைய சந்தோஷத்தை எப்படி பகிர்வது என்று தெரியாமல், அழுததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மகிழ்ச்சி தருணம்

மகிழ்ச்சி தருணம்

கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியது. மிகுந்த நெகிழ்ச்சியான அந்த தருணத்தை மீண்டும் பெருவதற்காக அணி வீரர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் வெறித்தனத்துடன் காத்திருந்தனர். ஆனால், அந்த கனவு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

28 ஆண்டுகள் தவம்

28 ஆண்டுகள் தவம்

இந்நிலையில், கடந்த 2011ல் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியுடன் மோதிய எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி, 28 ஆண்டுகள் தவத்திற்கு பின்பு உலக கோப்பையை கைப்பற்றியது. அணியின் வீரர்கள் மட்டுமின்றி, உலக அளவில் உள்ள இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய தருணம் இது.

நினைவுகூர்ந்த ஹர்பஜன்

நினைவுகூர்ந்த ஹர்பஜன்

தன்னுடைய கேரியரில் உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற தன்னுடைய 22 ஆண்டு தவத்திற்கு கிடைத்த பரிசாக இந்த வெற்றியை பார்த்தார் சச்சின் டெண்டுல்கர். இதையடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்து எந்தவிதமான நினைவும் அவருக்கு இருக்கவில்லை. மாறாக, தன்னுடைய சக வீரர்களுடன் இணைந்து நடனமாடி அவர் தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். இந்த மகிழ்ச்சி தருணத்தைதான் தற்போது ஹர்பஜன் சிங் நினைவு கூர்ந்துள்ளார்.

அனைவரின் முன்னால் அழுதேன்

அனைவரின் முன்னால் அழுதேன்

உலக கோப்பை வெற்றியை அடுத்து எவ்வாறு செயல்படுவது, எப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என்பதை அறியாமல தானும் மைதானத்தில் பதக்கத்தை கையில் வாங்கிய போது அனைவரின் முன்னாள் அழுததாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய இரவு தான் பதக்கத்துடன் படுத்து தூங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, April 9, 2020, 20:58 [IST]
Other articles published on Apr 9, 2020
English summary
Sachin Tendulkar danced after 2011 World Cup win : Harbhajan Singh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+