டப்ளின்: நியூஸிலாந்து பெண்கள் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளைய்டி வருகிறது. நியூஸிலாந்து மற்றும் அயர்லாந்து பெண்கள் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் இன்று டப்ளினில் நடைபெற்றது.
முதலில் ஆடிய நியூஸிலாந்து பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 440 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அமெலியா கெர் கடைசி வரை அட்டமிழக்காமல் 232 ரன்களை குவித்தார். இதில் 31 பௌண்டரிகளும் மற்றும் 2 சிக்ஸர்களும் அடங்கும்.இந்த போட்டியில் பல சாதனைகள் உடைக்கப்பட்டன.
